பாகுபலியை 2 வை தூக்கி சாப்பிட்ட கேஜிஎஃப் 2... அசைக்கமுடியாத இடத்தை பிடித்த யாஷ்..
பிரமாண்ட வசூல் சாதனை படித்திருந்த பாகுபலி 2 வசூல் சாதனையை கேஜிஎஃப் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

KGF 2
முதல் பாகத்தின் மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மனதில் கே.ஜி.எஃப் விதைத்திருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் இரண்டாம் பாகம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வெளியாகியுள்ளது.
kgf 2
யாஷ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கே.ஜி.எஃப் 2. ரசிகர்களை கவர்ந்த அதே மாஸோடு வெளியாகியுள்ளது. தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் வந்து குவிந்து வருகிறது..
KGF 2
5 மொழிகளில் டப் ஆகி பான் இந்தியா படமாக கடந்த 14-பின் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்த படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
KGF 2
விஜயின் பீஸ்ட் படத்துக்கு போட்டியாக கே.ஜி.எஃப் 2 வெளியிடப்பட்டுள்ளது. இதில் பீஸ்ட் படம் 800க்கும் மேற்பட்ட திரைகளிலும், கே.ஜி.எஃப் 2 300க்கும் மேற்பட்ட திரைகளிலும் வெளியிடப்பட்டன
KGF 2
அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் பாக்ஸ் ஆபிஸில் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் பல்வேறு சாதனைகளை செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..
KGF 2
பீஸ்ட் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவது கே.ஜி.எஃப் 2 படத்துக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது. அதோடு தமிழகத்தை தவற மற்ற இடங்களில் அதிகளவில் திரைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
KGF 2
இந்நிலையில் நேற்று வெளியான இந்த படம் பாகுபலி 2 வின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. இந்தியிலும் வெளியாகியுள்ள KGF 2. அங்கு சுமார் ரூ. 53.95 கோடியை வசூலித்துள்ளது. முன்னதாக வெளியான பாகுபலி 2 ரூ.46.5 கோடியை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.