- Home
- Cinema
- ரூ.1000 கோடியை தாண்டிய வசூல்... கே.ஜி.எஃப் 2 வெற்றியால் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய பிரசாந்த் நீல்
ரூ.1000 கோடியை தாண்டிய வசூல்... கே.ஜி.எஃப் 2 வெற்றியால் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய பிரசாந்த் நீல்
Prashanth Neel : உலகமெங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்ட இப்படம் அமோக வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது.

கன்னடத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான உக்ரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரசாந்த் நீல். முதல் படத்திலேயே வெற்றிகண்ட இவருக்கு அடுத்ததாக கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் கே.ஜி.எஃப். யஷ் ஹீரோவாக நடித்த இப்படம் கடந்த 2018 ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார் பிரசாந்த் நீல். இதில் யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், சரண், ஈஸ்வரி ராவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகி இருந்த இப்படம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியானது.
உலகமெங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்ட இப்படம் அமோக வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது. இப்படத்திற்கு பின்னர் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இதில் சுருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்திற்காக ரூ.25 கோடி சம்பளமாக வாங்கியுள்ள பிரசாந்த் நீல், இதன்பின் கமிட் ஆன படங்களுக்கு தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தி உள்ளார். அதாவது அவர் அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர் படத்தை இயக்க ரூ.50 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கே.ஜி.எஃப் 2 ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதன் காரணமாக பிரசாந்த் நீல் தனது சம்பளத்தை கூட்டி உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... ஏ.ஆர்.ரகுமான் இசையில் திரைப்படமாகும் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு - இயக்கப்போவது யார் தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.