- Home
- Cinema
- Kerala Model Shahana Death : நடிகை சஹானா மரணத்தில் திடீர் திருப்பம்...கொலைதான் அடித்து சொல்லும் சகோதரர்
Kerala Model Shahana Death : நடிகை சஹானா மரணத்தில் திடீர் திருப்பம்...கொலைதான் அடித்து சொல்லும் சகோதரர்
Kerala Model Shahana Death : தனது முதல் பட ரிலீசுக்காக காத்திருந்த சஹானா தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லையென்று அவரது குடும்பத்தினர் அடித்து கூறியுள்ளனர்.

actress shahana
மலையாள மாடலும் நடிகையுமான சஹானா சமீபத்தில் வீட்டு சன்னல் கம்பியில் தூக்கிட்டு நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவரது மரணம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அவரது கணவர் சஜ்ஜத்தை போலீசார் காவலில் எடுத்துள்ளனர். அவரிடமிருந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானதாக தெரிகிறது.
shahana
நடிகையின் தற்கொலை தொடர்பாக அவரது கணவர் சஹானா வசித்த பிளாட்டுக்கு அவரது கணவர் சஜ்ஜாத்தையும் அழைத்துக்கொண்டு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சஜ்ஜாத் போதைப்பொருள் பயன்படுத்தி வந்துள்ளதும், ஃபுட் டெலிவரி செய்வதாகக்கூறி பார்சலில் போதைப்பொருள் கடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சஹானாவுக்கு சினிமா மூலம் நிறைய வருவாய் வந்துள்ளது. அந்தப் பணத்தை எந்த வங்கி கணக்கில் வைப்பது என்பது சம்பந்தமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதையும் சஜ்ஜாத் ஒப்புக்கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
shahana
இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு செய்த தடவியல் துறையினர் நடிகை சஹானா தற்கொலை செய்த்து கொண்டுள்ளார் என்பது ஓரளவு உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர் தூக்கிட்டு கொண்ட கயிற்றை ஆய்வு செய்த தடயவியல் குழுவினர். அந்த கயிறு சஹானா எடையுள்ள ஒருவரைத் தாங்கும் அளவுக்கு வலிமை கொண்டது என்பதை தடயவியல் ஆய்வு நிரூபித்ததுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
shahana
முன்னதாக சஹானா மரணம் குறித்து பேசிய அவரது தாயார்,'“என் மகள் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள், அவள் கொலை செய்யப்பட்டாள். கணவர் அடிப்பதாகவும், சரியாக சாப்பாடு கொடுக்கவில்லை என்றும் என்னிடம் புகார் அளித்தாகவும், தன மகள் சித்திரவதை செய்யப்பட்டாள். போலீசார் விசாரணை நடத்தி எனது மகளுக்கு நீதி வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
shahana
இந்நிலையில் சஹானாவின் சகோதரர், நடிகைக்கு சஹானா தனது முதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. படம் குறித்து முகுந்த எதிர்பார்ப்பில் இருந்த சஹானா இந்த படத்திற்கு பிறகு தனக்கு ப்ரைட்டான பியூசர் இருப்பதாக அடிக்கடி தெரிவித்து வந்தார். அதோடு பட இயக்குனரும் ஷானாவின் நடிப்பு குறித்து பாராட்டியுள்ளார். இவ்வாறு இருக்க சஹானா எப்படி தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.