தியேட்டர்களில் கூட்டமின்றி காத்துவாங்கிய ரிவால்வர் ரீட்டா... 3 நாள் வசூல் இவ்வளவு தானா?
சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான ரிவால்வர் ரீட்டா திரைப்படம் மூன்று நாட்களில் எவ்வளவு வசூலித்து உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Revolver Rita Box Office
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்த படம் 'ரிவால்வர் ரீட்டா'. விஜய்யின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' மற்றும் 'மாநாடு' ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதிய ஜே.கே. சந்துருவின் முதல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ரிவால்வர் ரீட்டா'. சந்துருவே திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் பி. கிருஷ்ணன் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல். படத்தொகுப்பும் செய்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், கீர்த்தியுடன் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சென்றாயன், சூப்பர் சுப்பராயன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ரிவால்வர் ரீட்டா வசூல்
ரிவால்வர் ரீட்டா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டதாக அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் முதல் இரு தினங்களில் இப்படம் ரூ.1.5 கோடி வசூலித்து இருந்ததாக பிரபல வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஞாயிறுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் நேற்று வெறும் ரூ.75 லட்சம் மட்டுமே வசூலித்தது. இதன்மூலம் மூன்று நாட்கள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 2.23 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
சொதப்பிய கீர்த்தி சுரேஷ்
ஜே.கே. சந்துரு இயக்கிய இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஒரு வலிமையான, தைரியமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக ட்ரெய்லர் காட்டியது. விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளும், நகைச்சுவையும் கலந்திருந்ததால், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சிறந்த தொழில்நுட்பக் குழு, தீவிரமான பின்னணி இசை, மற்றும் வலுவான கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றால், 'ரிவால்வர் ரீட்டா' இந்த ஆண்டின் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ரசிகர்கள் ஏமாற்றம்
'மகாநடி' மூலம் வலுவான பெண் கதாபாத்திரங்களில் தன்னால் ஜொலிக்க முடியும் என நிரூபித்த கீர்த்தி சுரேஷுக்கு, இந்தப் படம் அவரது கெரியரில் ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் என ரசிகர்களும் விமர்சகர்களும் நம்பினர். ஆனால் படத்தின் ரிசல்ட் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், ஒரு முழுமையான திரைப்படமாக இது ரசிகர்களைக் கவரவில்லை என்பதே திரையரங்குகளில் இருந்து வரும் கருத்து.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

