MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ‘அண்ணாத்த’-க்கு ஆசைப்பட்டு 2 பிரம்மாண்ட படங்களை நழுவவிட்ட கீர்த்தி சுரேஷ்! அடடா.. ரெண்டுமே வேறலெவல் படமாச்சே

‘அண்ணாத்த’-க்கு ஆசைப்பட்டு 2 பிரம்மாண்ட படங்களை நழுவவிட்ட கீர்த்தி சுரேஷ்! அடடா.. ரெண்டுமே வேறலெவல் படமாச்சே

சிவா இயக்கத்தில் கடந்தாண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 31 2022, 09:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் தோல்வியை சந்தித்தாலும் , இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, 'ரஜினிமுருகன்' மற்றும்  'ரெமோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அதே நேரம் கீர்த்தி சுரேஷின் தனித்துவமான நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்த திரைப்படம் என்றால், அது 'மகாநடி' திரைப்படம் தான். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் அச்சு அசல், சாவித்திரியாகவே வாழ்ந்து நடித்திருந்தார் என்று கூறும் அளவிற்கு விமர்சனங்கள் கிடைத்தது. இந்த படத்திற்காக, கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் வென்றார். 

35

இந்த படத்துக்கு பின்னர் அவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அங்கு சிரஞ்சீவி, மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த.

45

சிவா இயக்கத்தில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான இப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இதுதவிர நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாலும், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கலவையான விமர்சனங்களையும் பெற்றது.

55

இந்நிலையில், இந்த படத்தில் ரஜினியுடன் நடிப்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் 2 பிரம்மாண்ட படங்களின் வாய்ப்பை நழுவவிட்டுள்ளார். அவற்றுள் ஒன்று, சமீபத்தில் நானி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ஷ்யாம் சிங்கா ராய். இதில் சாய் பல்லவி கேரக்டரில் முதலில் கீர்த்தி தான் நடிப்பதாக இருந்தார். மற்றொரு படம் மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான ‘பொன்னியின் செல்வன்’. அண்ணாத்தைக்காக அவர் இந்த இரண்டு பட வாய்ப்புகளையும் உதறித்தள்ளியது கொஞ்சம் ஓவர் தான் என கோலிவுட் வாட்டாரத்தில் முணுமுணுக்கின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கீர்த்தி சுரேஷ்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
OTT : ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கு ஒரு ட்விஸ்ட்... ஓடிடி-ல இந்தப் படம் பார்த்தா உங்க மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்...!
Recommended image2
கமர்ஷியல் கிங் + பிரம்மாண்ட இயக்குனர் கூட்டணி... தோல்விக்கு பின் தரமான கம்பேக் கொடுக்க ரெடியான ஷங்கர் - முருகதாஸ்?
Recommended image3
Nanjil Vijayan : நான் சாபம்விட்டது உண்மைதான்; ஆனா...? நாஞ்சில் விஜயனுக்கு பதிலடி கொடுத்த வைஷ்ணவி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved