MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • என்ன ஒரு தங்கமான மனசு... தசரா படக்குழுவுக்கு தங்கக்காசு பரிசாக வழங்கிய கீர்த்தி சுரேஷ்

என்ன ஒரு தங்கமான மனசு... தசரா படக்குழுவுக்கு தங்கக்காசு பரிசாக வழங்கிய கீர்த்தி சுரேஷ்

தசரா படத்தின் ஷூட்டிங் நிறைவு நாளின் போது தங்கமான செயல் ஒன்றை செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 20 2023, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் - நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷ், மகாநடி படத்துக்காக தேசிய விருது வென்ற இவர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது தமிழில் மாமன்னன், சைரன், ரிவால்டர் ரீட்டா, ரகுதாதா போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதில் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி. அதேபோல் சைரன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர அவர் நடிப்பில் உருவாகி வரும் ரிவால்டர் ரீட்டா மற்றும் ரகுதாதா ஆகிய இரு படங்களுமே கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களாகும்.

இதையும் படியுங்கள்... துணிவு படம் பார்க்க விடாததால்... ஆத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அஜித் ரசிகர்

34

தமிழைப் போல் தெலுங்கில் போலா ஷங்கர் மற்றும் தசரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி. இதில் போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார். இது அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். மற்றொரு தெலுங்கு படமான தசராவின் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் தான் நிறைவடைந்தது.

44

இந்நிலையில், தசரா படத்தின் ஷூட்டிங் நிறைவு நாளின் போது நடிகை கீர்த்தி சுரேஷ் செய்த தங்கமான செயல் ஒன்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அது என்னவென்றால், அப்பட ஷூட்டிங் நிறைவு நாளின் போது அப்படத்தில் பணியற்றிய சக நடிகர்கள், டெக்னீஷியன்கள் என 130 பேருக்கு தலா 2 கிராம் தங்கக்காசு பரிசாக வழங்கி இருக்கிறார். அவர் செய்த இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிகபட்ச பணத்தொகையுடன் வெளியேறினார் அமுதவாணன் - அதுவும் இத்தனை லட்சமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கீர்த்தி சுரேஷ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved