கிளாமர் ரோலில் நானா? அதிர்ச்சியான கீர்த்தி கொடுத்த விளக்கம்!
"நான் அப்படி சொல்லவே இல்லை. கிளாமர் என்ற வார்த்தைக்கு அழகு என்று அர்த்தம். என கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

keerthy suresh
சமீபத்தில் வெளியான சாணிக்காகிதம், சர்காரு வாரி பாட்டா என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது கவர்ச்சி பாதைக்கு சென்றுவிட்டதாக சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது.
keerthy suresh
ஹாலிவுட், பாலிவுட் டோலிவுட் என கலக்கி வரும் நாயகி கீர்த்தி சுரேஷ்.தமிழ், பன் மொழிகளிலும் ரசிகர் பட்டாளம் உண்டு பல மொழிகளில் மார்க்கெட்டும் உண்டு. தயாரிப்பாளரின் மகளான இவர் இது என்ன மாயம் என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்
keerthy suresh
சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சகளை கொள்ளை கொண்ட கீர்த்தி சுரேஷ் .அதோடு நடிகையர் திலகம் சாவித்திரி ஆகவே வாழ்ந்து காட்டிய மகா நடி மூலம் தேசிய விருதையும் வென்றெடுத்தார்.
keerthy suresh
முன்னணி நாயகியாக உள்ள கீர்த்தி சுரேஷ் கிளாமர் ரோலில் நடிக்க ரெடியாகிவிட்டதாக கூறப்படுவது குறித்து விளக்கம் அளித்துள்ள கீர்த்தி சுரேஷ், "நான் அப்படி சொல்லவே இல்லை. கிளாமர் என்ற வார்த்தைக்கு அழகு என்று அர்த்தம். நான் அதிகம் skin show இருக்கும் ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை" என தெரிவித்து இருக்கிறார்.