- Home
- Cinema
- பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடம்பிடித்த கவினின் மாஸ்க்... முதல் நாளே இத்தனை கோடி வசூலை வாரிசுருட்டியதா?
பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடம்பிடித்த கவினின் மாஸ்க்... முதல் நாளே இத்தனை கோடி வசூலை வாரிசுருட்டியதா?
விக்ரணன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் மாஸ்க். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூலித்து உள்ளது என்பதை பார்க்கலாம்.

Mask Movie Day 1 Box Office Collection
தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் கவின். ஆனால் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கிஸ் மற்றும் பிளெடி பெக்கர் ஆகிய திரைப்படம் படுதோல்வியை சந்தித்தன. இதனால் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் கவின். அவர் நடிப்பில் தற்போது ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் தான் மாஸ்க். இப்படத்தை ஆண்ட்ரியா தயாரித்து உள்ளார். இப்படத்தை விக்ரணன் இயக்கி இருக்கிறார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், அப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது என்பதை பார்க்கலாம்.
மாஸ்க் படத்தின் வசூல்
அதன்படி மாஸ்க் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே தமிழ்நாட்டில் ரூ.1.3 கோடி வசூலித்துள்ளது. உலகளவில் இப்படம் 2 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நேற்று வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமும் மாஸ்க் தான். இதன்மூலம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 திரைப்படமாக மாஸ்க் அமைந்திருக்கிறது. கடைசியாக கவின் நடிப்பில் வெளியான கிஸ் திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் வெறும் 40 லட்சம் மட்டுமே வசூலித்திருந்தது. அதைக்காட்டிலும் மாஸ்க் திரைப்படம் மூன்று மடங்கு அதிக வசூலை வாரிக்குவித்து உள்ளது.
மாஸ்க் பட கதை என்ன?
டிடெக்டிவாக இருக்கும் கதாநாயகன் வேலு (கவின்) தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறார். டிக்கையாளர்களிடம் மட்டுமின்றி யார் தன்னிடம் சிக்கிக்கொள்கிறார்களோ, அவர்களிடம் இருந்து பணத்தை கறந்துவிடுகிறார். ஏனென்றால் பணம் மட்டும் தான் உலகத்தின் ஒரே தேவை என்கிற நோக்கத்துடன் வாழும் நபர்தான் இந்த வேலு. ஏற்கனவே திருமணம் ஆகி இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. ஆனால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ரதியை (ருஹானி ஷர்மா) பார்க்கும் வேலு அவருடன் பேசி பழகுகிறார். ரதிக்கும் திருமணம் ஆகிவிட்டது, ஆனால் அவருக்கு அந்த திருமணத்தில் எந்த விருப்பமும் இல்லை என கூற, இருவரும் நெருங்கி பழகுகிறார்கள். மறுபக்கம், பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியாக நடக்கும் தவறை எதிர்த்து போராடி, அவர்களை மீட்டு நல்வாழ்வு அமைத்து தரும் நபராக என்ட்ரி கொடுக்கிறார் பூமி (ஆண்ட்ரியா). அவர்களை நன்றாக படிக்கவும் வைக்கிறார். வெளியே இவருக்கு இப்படி ஒரு முகம் இருந்தாலும், இவருக்கு வேறொரு முகமும் உள்ளது.
மாஸ்க் திரைப்பட ஸ்டோரி
தன்னிடம் உள்ள பெண்களை வைத்து அரசியல் வாதிகளின் தேவையை பூர்த்தி செய்கிறார். அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொள்கிறார். தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதி பவன், பூமியிடம் ரூ. 440 கோடியை கொடுத்து தொகுதி முழுவதும் இந்த பணத்தை யாருக்கும் தெரியாமல் அனுப்பவேண்டும் என கூறுகிறார். பணத்தை தனது சூப்பர் மார்க்கெட்டில் பூமி பதுக்கி வைக்க, அந்த சூப்பர் மார்க்கெட்டை எம்.ஆர். ராதா மாஸ்க் போட்டுக்கொண்டு ஒரு கும்பல் கொள்ளை அடிக்கிறது. இது தெரியாமல், கொள்ளை அடிக்கும் இடத்திற்கு வேலு வந்துவிடுகிறார்.
பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பலில் இருந்த அனைவரும் வெளியேற, அதே நேரத்தில் அங்கிறுந்து ரதியின் வீட்டிற்கு வேலு வருகிறார். அதே நேரத்தில் ரதியின் கணவரும் வீட்டிற்கு வர, தனது கணவருக்கு தெரியாமல் வேலுவை வீட்டை விட்டு அனுப்ப ரதி முயற்சி செய்யும் போது, வீட்டிற்கு வந்த ரதி கணவரின் Bag-ல் எம்.ஆர். ராதா மாஸ்க் இருப்பதை கவின் பார்த்து, சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையடித்தது இவன் தானா என அதிர்ச்சியில் உறைந்து போகிறார். இதன்பின் என்ன நடந்தது? ரூ. 440 கோடியை கொள்ளையடிக்க என்ன காரணம்? இதிலிருந்து கவின் தப்பித்தாரா இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

