DADA movie : பிக்பாஸ் கவினை கைக்குழந்தையுடன் சுத்தவிட்ட பீஸ்ட் நடிகை... கவனம் ஈர்க்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
DADA movie : புதுமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கும் டாடா படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார்.
சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகர் கவின் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும், அவரை பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்ட கவினுக்கு அந்நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.
இதையடுத்து லிப்ட் படத்தில் நடித்திருந்தார் கவின். கடந்தாண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றதோடு நடிகர் கவினுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுத்தந்தது. இதையடுத்து இவர் நடிப்பில் ஆகாஷ்வாணி என்கிற வெப் தொடர் வெளியானது. இந்த வெப் தொடர் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் பின்னர் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஊர்க்குருவி படத்தில் நடிக்க கமிட் ஆனார் கவின். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார் கவின்.
இந்நிலையில், கவின் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. புதுமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கும் இப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இப்படம் மூலம் அவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதன்படி இப்படத்திற்கு டாடா என பெயரிடப்பட்டுள்ளது. கவின் கைக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Sneha :40 வயதிலும் குறையாத அழகுடன் மிளிரும் சினேகா! சேலை அழகில் சிலிர்க்க வைத்த புன்னகை அரசியின் கியூட் photos