- Home
- Cinema
- Na Muthukumar : டீக்கடையில் வைத்து நா முத்துக்குமார் எழுதிய ‘இந்த’ மாஸ்டர் பீஸ் பாடல் பற்றி தெரியுமா?
Na Muthukumar : டீக்கடையில் வைத்து நா முத்துக்குமார் எழுதிய ‘இந்த’ மாஸ்டர் பீஸ் பாடல் பற்றி தெரியுமா?
இயக்குனர் ராமும், பாடலாசிரியர் நா முத்துக்குமாரும் டீக்கடையில் அமர்ந்து எழுதிய பாடல் ஒன்று பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. அதைப் பற்றி பார்க்கலாம்.

Na Muthukumar Song Secret
தன்னுடைய பாடல் வரிகளால் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் தான் நா முத்துக்குமார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது. நா முத்துக்குமாரின் கெரியரில் அவர் எண்ணற்ற பாடல்களை கொடுத்தது யுவன் சங்கர் ராஜா இசையில் தான். அப்படி யுவன் - நா முத்துக்குமார் கூட்டணியில் வெளிவந்த ஒரு மாஸ்டர் பீஸ் பாடல் ஒன்று உருவான கதையை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க உள்ளோம்.
நா முத்துக்குமார் பாடல் ரகசியம்
காலம் காலமாக ஒரு பாடலை நாம் வெறும் பாடலாக மட்டும் பார்த்ததில்லை. அது சொல்ல வருகிற எமோஷன்கள், அதன் பின்னால் உள்ள உணர்வுகள், அது நமக்குள் கடத்தக்கூடிய விஷயம். அது படத்திற்காக சொல்ல வருகிற ஆழமான உணர்வு போன்றவற்றின் அடிப்படையில் தான் நாம் பாடல்களை அணுகுகிறோம். அப்படி இருக்கக்கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான படலை தான் நா முத்துக்குமார் ஒரு டீக்கடையில் அமர்ந்து எழுதினார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. அது தான் நிஜம்.
நா முத்துக்குமார் டீக்கடையில் வைத்து எழுதிய பாடல்
அந்தப் பாடல் வேறேதுவுமில்லை கற்றது தமிழ் படத்தில் இடம்பெற்ற ‘பறவையே எங்கு இருக்கிறாய்’ என்கிற பாடல் தான். காதலி எங்கே போய்விட்டால் என தேடும் ஒருவனுக்கு, அட்ரஸே இல்லாமல் ஒரு மொட்டைக் கடிதாசி வருகிறது. அந்த கடிதத்தில் இருக்கும் போஸ்ட் ஆபிஸ் முத்திரையை வைத்து தன் காதலியை தேடி செல்கிறான் நாயகன். பெயரே தெரியாத ஊரை நோக்கி அவனுடைய பயணம் தொடங்குகிறது. அந்த பயணம் தான் பறவையே எங்கு இருக்கிறாய் பாடல். தமிழ் சினிமாவில் வந்த சிறந்த 10 பாடல்களை எடுத்துக்கொண்டால் நிச்சயம் அதில் ஒன்றாக இந்த பாட்டு இருக்கும்.
பாடல் வரிகளால் படத்திற்கே உயிர்கொடுத்த நா முத்துக்குமார்
ரயிலிலோ அல்லது பேருந்திலோ செல்லும் போது இந்த பாடல் கேட்கும் போது அது கொடுக்கும் கண்ணீர் கலந்த ஒரு உணர்வும், இப்பாடல் கொடுக்கும் பேரமைதியும் தான் இந்த பாடலின் ஆழத்தை எடுத்துச் சொல்லும். ஒரு பாடல் அந்தப் படத்தை அப்படியே பிரதீபலித்துவிட்டால் இயக்குனருக்கு பாதி வேலை முடிந்ததற்கு சமம். கற்றது தமிழ் போன்ற ஒரு ஆழமான கதைக்கு பாடல் வரிகள் எவ்வளவு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்கு நா முத்துக்குமாரின் பாடல் வரிகளே சான்று.
பறவையே எங்கு இருக்கிறாய் பாடல் உருவான விதம்
யுவன் - இளையராஜா காம்போ என்றாலே அது சூப்பர் ஹிட் தான் என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் பல வெற்றிப்பாடல்களை கொடுத்துள்ளனர். அப்படி இவர்கள் காம்போவில் உருவான ஒரு மாஸ்டர் பீஸ் பாடல் தான் இந்த பறவையே எங்கு இருக்கிறாய் பாடல். யுவன் இசையில் இளையராஜாவின் குரல் இப்பாடலுக்கு வலு சேர்த்திருந்தது. ஆனால் முதன்முதலில் இப்பாடலை யுவன் பாடியதை கேட்டு தான் இந்த பாடலுக்கு ராம் ஓகே சொன்னாராம். ஆனால் பின்னர் இளையராஜா பாடி அதுதான் படத்திலும் இடம்பெற்றது. ராம் சிச்சுவேசன் சொல்ல சொல்ல பாடலாசிரியர் நா முத்துக்குமார் இந்தப் பாடலை ஒரு டீக்கடையில் வைத்தே எழுதி முடித்துவிட்டாராம். அப்படி ஒரு டீக்கடையில் உருவான இப்பாடல் இன்று உலகமெங்கும் பலரின் மனதை வருடி வருகிறது.