திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின் பிறந்த முதல் குழந்தை... செம குஷியில் கத்ரீனா கைஃப்..!
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் விக்கி கெளஷலை 2021-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், அத்தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

Katrina Kaif and Vicky Kaushal Announce Birth of Their Baby
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், விக்கி கௌஷல் தம்பதியரின் வீட்டிற்கு பு. கத்ரீனா அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை கத்ரீனா - விக்கி கெளஷல் இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அந்தப் பதிவில் விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப் இருவரும் ஒரு பொம்மையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, 'Blessed' என்று எழுதியுள்ளனர்.
4 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பம்
2021 டிசம்பரில் ராஜஸ்தானில் மிகச் சில பாலிவுட் நட்சத்திரங்கள் முன்னிலையில் கத்ரீனா கைஃப், விக்கி கௌஷல் திருமணம் செய்து கொண்டனர். பலமுறை கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டாலும், அவை அனைத்தும் வதந்திகளாகவே இருந்தன. கடந்த செப்டம்பர் 23ந் தேதி அன்று, இந்த ஜோடி இன்ஸ்டாகிராமில் தங்கள் கர்ப்பம் குறித்த தகவலைப் பகிர்ந்தது. கத்ரீனா கைஃபின் வயிற்றை விக்கி கௌஷல் அன்புடன் தொடும் புகைப்படம் பகிரப்பட்டது. அதற்கு "எங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதம் வருகிறது" என்று தலைப்பிட்டிருந்தனர். பலர் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
லண்டனில் பிறந்த குழந்தை
கர்ப்பமான பிறகு, கத்ரீனா கைஃப் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். அதுமட்டுமின்றி, விடுமுறைக்காக எங்கும் சுற்றவும் இல்லை. மூன்றாவது மாதத்திலிருந்து அவர் தனது தாய் வீட்டினருடன் லண்டனில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கேயே பிரசவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விக்கி கௌஷல் குடும்பத்தினர் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. கத்ரீனா கைஃப் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த பாலிவுட் நடிகை. ஆனால், இந்தியர் என்று சொல்லும் அளவிற்கு அவர் இந்தி மொழியைப் பேசுகிறார், இந்து மத சடங்குகளைப் பின்பற்றுகிறார்.
கத்ரீனாவின் பரிகாரத்துக்கு கிடைத்த பலன்
குடும்பத்தில் சர்ப்ப தோஷம் இருந்தால் குழந்தை பிறப்பதில் சிக்கல், தோல் சம்பந்தமான நோய்கள் வரும் என்று கூறுவார்கள். கடந்த மார்ச் மாதமே நடிகை கத்ரீனா கைஃப் குக்கே சுப்ரமணியா கோவிலுக்குச் சென்று, அங்கு சர்ப்ப சம்ஸ்கார பூஜை செய்திருந்தார். இதை அவர் பெரிதாகப் பொதுவெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், புகைப்படங்கள் வைரலாகின. குழந்தை பாக்கியத்திற்காக கத்ரீனா பூஜை செய்திருந்தார். 42 வயதில் கத்ரீனா கைஃப் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். தினமும் இந்தக் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, சர்ப்ப தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.