தனுஷின் விவாகரத்து குறித்த கேள்வியால் சட்டென டென்ஷன் ஆன கஸ்தூரி ராஜா - கோபத்தில் என்ன சொன்னார் தெரியுமா?
Dhanush : தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜாவிடம், பத்திரிகையாளர் ஒருவர் தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பினார்.
நடிகர் தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து, குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து குடும்பத்தினர் தரப்பில் அவர்கள் இருவரையும் சேர்த்துவைக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் அது எதுவும் சக்சஸ் ஆகவில்லை. இவர்களுக்கு விவாகரத்தான சமயத்தில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அளித்த பேட்டி ஒன்றில், அதுவெறும் குடும்ப பிரச்சனை தான் என்றும், அவர்கள் மீண்டும் இணைந்துவிடுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக தனுஷ் படத்தை வெளியிடுவது ஏன்? - மவுனம் கலைத்த தயாரிப்பாளர் தாணு
ஆனால் அவர் சொன்னபடி நடக்கவில்லை. தனுஷின் விவாகரத்து முடிவுக்கு பின்னர் பெரியளவில் பேட்டிகள் எதுவும் அளிக்காமல் இருந்து வந்த தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா, சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கும் பேட்டி அளித்தார். அந்த சமயத்தில் பத்திரிகையாளர் ஒருவர் தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனால் டென்ஷன் ஆன கஸ்தூரி ராஜா, இது சம்பந்தம் இல்லாத கேள்வி, என்னிடம் இதை நீங்க கேட்கக்கூடாது. இதற்காக தான் நான் மீடியாவை சந்திக்காமல் இருந்து வந்தேன். அத்துமீறி கேள்வி கேட்குறீங்க என அந்த பத்திரிகையாளரை பார்த்து சற்று கோபமாக பேசினார். பின்னர் உடனிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி கூட்டிச் சென்றனர்.
இதையும் படியுங்கள்... மனம் கமழும் ‘மல்லிப்பூ’ பாடலுக்கு உயிர்கொடுத்த பாடகி.. யார் இந்த மதுஸ்ரீ? - அவர் பாடிய பாடல்கள் லிஸ்ட் இதோ