ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷ் மீண்டும் இணைகிறார்களா? என்ன தான் நடக்கிறது... கஸ்தூரி ராஜா கூறிய தகவல்..!
மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இணைய உள்ளதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், இதுகுறித்து கேள்விகளுக்கு தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகர் தனுஷ். திருமணம் ஆகி சுமார் 18 வருடங்கள், ஒற்றுமையான தம்பதிகளாக வாழ்ந்த இவர்கள், திடீர் என தங்களின் விவாகரத்து குறித்து அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்களின் மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் மாறி... மாறி தாய் தந்தையின் அரவணைப்பில் இருந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட, யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சியில் மகனின் ஆசைக்காக இருவரும் சந்தித்து கொள்ளும் சூழல் ஏற்பட்டது. அப்போது மகனுடன் சேர்ந்து இருவரும் எடுத்து கொண்ட புகைப்பங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
மேலும் செய்திகள்: நயன்தாராவின் திடீர் முடிவு... மருத்துவர்கள் கூறியது இது தான்..? குண்டை தூக்கி போட்ட பயின்வான் ரங்கநாதன்!
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து முடிவை அறிவிப்பதற்கு முன்பாகவே, இருவருக்கும் இடையே ரஜினி குடும்பத்தினர் மற்றும் கஸ்தூரி ராஜா குடும்பத்தினர் சமாதானம் பேச முயன்றபோது அதில் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து மீண்டும் இருவருக்கும் இடையே நடத்தப்பட்ட சமாதான பேச்சு வார்த்தையில், இருவருமே மீண்டும் சேர்ந்து வாழ தயாராகி வருவதாகவும், எனவே விவாகரத்து முடிவை கைவிட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து எழுப்பட்ட கேள்விக்கு கஸ்தூரி ராஜா பதில் அளித்துள்ளார்.
மேலும் செய்திகள்: மாமன்னன் ராஜ ராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? சரத்குமார் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
அதாவது, தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்கு தெரியாது, ஆனால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். என தெரிவித்துள்ளார். தனுஷ் - ஐஸ்வர்யா தங்களிடம் விவாகரத்து முடிவை கைவிட்டு விட்டு, மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதே ரசிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆசையாக இருக்கும் நிலையில் என்ன நடக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் செய்திகள்: பாத் டப்பில் பளபளக்கும் கவர்ச்சி உடையுடன் அமர்ந்து... முத்தம்மிட்டு பரவசப்படுத்தும் ஆண்ட்ரியா!