- Home
- Cinema
- Karuppu Vs Drishyam 3 Box Office Collection : கருப்பு பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய திரிஷ்யம் 3..!
Karuppu Vs Drishyam 3 Box Office Collection : கருப்பு பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய திரிஷ்யம் 3..!
Karuppu vs Drishyam 3 Box Office : சூர்யா நடித்த கருப்பு மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியாகி உள்ள திரிஷ்யம் 3 ஆகிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

Karuppu vs Drishyam 3 Box Office
மே மாதம் இந்தியளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்றால் அது சூர்யாவின் கருப்பு மற்றும் மோகன்லால் நடித்த திரிஷ்யம் 3 தான். இதில் கருப்பு திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக திரிஷ்யம் 3திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதில் கருப்பு திரைப்படம் 200 கோடியை கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. கருப்பு திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே ரூ.28.93 கோடி வசூலித்திருந்தது. ஆனால் அந்த சாதனையை நேற்று ரிலீஸ் ஆன திரிஷ்யம் படம் முறியடித்துள்ளது.

திரிஷ்யம் 3 ரிலீஸ்
மலையாள சினிமாவில் சமீபத்தில் பயங்கர ப்ரீ-ரிலீஸ் ஹைப்போட வந்த படங்களில் 'திரிஷ்யம் 3' முக்கியமானது. மற்ற மொழி ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்த ஒரு மலையாளப் படமும் இதுதான். மோகன்லாலின் பிறந்தநாள் அன்றே படம் ரிலீஸ் ஆனது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆகிடுச்சு. நேற்றுதான் படம் தியேட்டர்களுக்கு வந்தது. முதல் ஷோ முடிந்ததும் படம் சூப்பர் என்ற டாக் பரவியதால், 'புக் மை ஷோ' போன்ற தளங்களில் டிக்கெட் விற்பனை ஜெட் வேகத்தில் எகிறியது. ஒரு கட்டத்தில், ஒரு மணி நேரத்திற்கு 41,000 டிக்கெட்டுகள் வரை விற்பனையானது.
திரிஷ்யம் 3 வசூல்
அதிகாரப்பூர்வ தகவலின்படி, நேற்று மட்டும் 67 நாடுகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் மாலை 4 மணிக்கெல்லாம், தியேட்டர் ஆக்குபன்சி 90 சதவீதத்திற்கும் மேல் சென்றது. இதனால், டிக்கெட்டுகளுக்கு பயங்கர டிமாண்ட் ஏற்பட்டது. இதை சமாளிக்க, கேரளாவில் மட்டும் நேற்று 500-க்கும் மேற்பட்ட லேட் நைட் ஷோக்கள் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரபல பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர் தளமான சாக்னில்க் கணக்குப்படி, இந்தப் படம் இந்தியாவில் முதல் நாளில் 18.37 கோடி ரூபாய் கிராஸ் வசூலும், 15.85 கோடி ரூபாய் நெட் வசூலும் செய்துள்ளது.
முதல் நாள் வசூல்
ஜிசிசி உள்ளிட்ட வெளிநாட்டு மார்க்கெட்களிலும் முதல் நாளில் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. உலகளவில் முதல் நாள் வசூல் 48.37 கோடி ரூபாய் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இது ஆரம்பகட்ட புள்ளிவிவரங்கள்தான். இறுதி எண்ணிக்கையில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. முக்கிய டிராக்கர்களும் இதை உறுதி செய்கிறார்கள். 'திரிஷ்யம் 3' படத்தின் உலகளாவிய ஓப்பனிங் கண்டிப்பாக 46 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும், 50 கோடி ரூபாயை நெருங்க வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 50 கோடியை கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சாதனை படைத்த திரிஷ்யம் 3
அதே சமயம், தயாரிப்பாளர்களே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. எது எப்படியோ, 'எம்புரான்' படத்திற்குப் பிறகு மலையாள சினிமாவின் இரண்டாவது மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை 'திரிஷ்யம் 3' பெற்றுள்ளது என்பது உறுதியாகிவிட்டது. மூன்றாவது இடத்தில் உள்ள 'பேட்ரியாட்' முதல் நாளில் 28.05 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. 'எம்புரான்' படத்தின் உலகளாவிய ஓப்பனிங் 68.20 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

