சாங்கு கொஞ்சம் வேகமாக இருக்கு – ஒன்னும் புரியல – கருப்பு முதல் சிங்கிள் விமர்சனம்!
Karuppu God Mode Song Lyric Video Review : சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியான நிலையில், பாடல் லிரிக் புரியவில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சூர்யா, கருப்பு முதல் பாடல், கருப்பு பாடல் லிரிக் வீடியோ
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்து வரும் படம் தான் கருப்பு. முழுக்க முழுக்க ஆன்மீக கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் சூர்யா சரவணன் மற்றும் கருப்பாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர த்ரிஷா, சுவாஸிகா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், சுப்ரீத் ரெட்டி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ் ஆர் பிரபு இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.
கருப்பு பாடல் லிரிக்
இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஆர் கலைவாணன் எடிட்டிங் செய்கிறார். சூர்யாவின் 45ஆவது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் பூஜை கடந்த ஆண்டு பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோயிலில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஆர் ஜே பாலாஜி, சாய் அபயங்கார்
இந்த நிலையில் தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருப்பு படத்தின் முதல் சிங்கிள் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. God Mode என்ற இந்த பாடலின் இடையில் கருப்பு பாடல் மேக்கிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. பாடல் வேகமாக பாடப்படுவதால் பாடல் வரிகளை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
கருப்பு பாடல் லிரிக் வீடியோ
எனினும் பாடலும் பாடலுக்கு சூர்யா டான்ஸ் ஆடும் காட்சிகளும் அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி இன்று தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் விருந்தாக அமைந்துள்ளது. இதோ கருப்பு முதல் சிங்கிள்:
சரவெடி ஆயிரம் பத்தணுமா
சுருட்டொரு லாரியா கொட்டட்டுமா
உருமிய உருஞ்சு தள்ளட்டுமா
திருமணத்திற்கு முன் உறவு – தீபிகா படுகோன் பேசிய வீடியோ மீண்டும் வைரல்!
கருப்பு பாடல் லிரிக் வீடியோ விமர்சனம்
கெடாகறி நெத்திலி வஞ்சரமா
படையல நெறப்பி தள்ளட்டுமா...
இது காட் மாடு
ஓசையே நிக்காது
கார பத்தும்
ஜன மொத்தம் என்று இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளது. மேலும், சூர்யாவின் கருப்பு முதல் பாடலுக்கு விஷ்ணு எடவன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். சாய் அபயங்கர் மற்றும் கானா முத்து இருவரும் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர். இனி கருப்பு படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்கள் கொடுத்த எதிர்மறை விமர்சனங்களுக்கு பிறகு கருப்பு சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளிக்கு சரவெடியா வெடிக்கும் கருப்பு முதல் சிங்கிள் – God Mode ராகு கேது ராங் ஏதும் காட்டாத!