MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Karthigai Deepam: ரேவதியிடம் மல்லிகா டாக்டர் சொன்னது என்ன? அதிர்ச்சியில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: ரேவதியிடம் மல்லிகா டாக்டர் சொன்னது என்ன? அதிர்ச்சியில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்

இந்த வாரம் TRP ரேட்டிங்கிலும் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய தினம் நடக்க போவது என்ன என்பது பற்றி பார்க்கலாம். 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 07 2025, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

எதிர்பாராத திருப்பங்களுடன், கார்த்திகை தீபம் சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில், நேற்றைய எபிசோடில் டான்ஸ் ஆட முயற்சி செய்த மகேஷ்க்கு, மயில் வாகனத்தின் சதியால் உடம்பு அரிப்பு ஏற்பட்டு ரேவதியுடன் டான்ஸ் ஆட முடியாமல் போனது.

25
மகேஷுக்கு வந்த சந்தேகம்

மகேஷுக்கு வந்த சந்தேகம்

இதை தொடர்ந்து இன்றைய தினம், மகேஷுக்கு இந்த திருமணத்தில் நடக்கும் விஷயங்களை பார்த்து சந்தேகம் எழ, ஏதோ இங்கு நடந்திருக்கிறது என, தன்னுடைய சந்தேகத்தை மாயாவிடம் கூறுகிறான். பின்னர் மாயா - மகேஷுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மல்லிகா டாக்டர் திருமணத்திற்கு வருகிறார். 

TRPயில் சன் டிவி சீரியலை தட்டிதூக்கிய கார்த்திகை தீபம்; இந்த வார டாப் 10 சீரியலில் அதிரடி மாற்றம்

35
உண்மையை நிரூபிக்க நினைக்கும் கார்த்திக்

உண்மையை நிரூபிக்க நினைக்கும் கார்த்திக்

பின்னர் மல்லிகா டாக்டர் மூலம் ரேவதிக்கு உண்மையை புரிய வைத்து, இந்த திருமணத்தை நிறுத்தி விடலாம் என பிளான் போடுகிறான் கார்த்தி. எனவே ரேவதியை டாக்டர் மல்லிகாவிடம் அழைத்து சென்று, மகேஷ் - மாயாவையும் டாக்டர் முன் நிறுத்துகிறான். உண்மை வெளியே வந்துவிடுமோ என படபடப்பில் மாயாவும் - மகேஷும் இருக்க, டாக்டர் மல்லிகா கார்த்திக்குக்கே அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் பேசுகிறார்.

45
ரேவதி முன் அப்படியே மாற்றி பேசும் டாக்டர் மல்லிகா

ரேவதி முன் அப்படியே மாற்றி பேசும் டாக்டர் மல்லிகா

மகேஷை பார்த்து, ஓ இவர் தான் மாப்பிள்ளையா? ரொம்ப அழகா இருக்காரு. ரேவதிக்கு பொருத்தமா இருப்பாரு என்று சொல்ல கார்த்திக், டாக்டர் ஏன் இப்படி பேசுகிறார் என நினைக்கிறான். மாயாவும் - மகேஷும் நிம்மதியாகிறார்கள். பிறகு மல்லிகா டாக்டர் சாமுண்டீஸ்வரியிடம் இந்த விஷயத்தை விஷயத்தை சொல்ல, சாமுண்டீஸ்வரி உண்மையை சொல்லல தானே என்று உறுதி செய்து கொள்கிறாள்.

Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்தி - மேடையில் ஷாக் கொடுத்த சாமுண்டீஸ்வரி; 'கார்த்திகை தீபம்' அப்டேட்!

55
சாமுண்டீஸ்வரிக்கு தெரியவரும் கார்த்தியின் நல்ல மனசு

சாமுண்டீஸ்வரிக்கு தெரியவரும் கார்த்தியின் நல்ல மனசு

மாயா இதை கேட்டு விட்டதால், அப்போ  சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரிந்து போச்சா என்று பதறுகிறாள். பின்னர் டாக்டர் மல்லிகாவை சந்திக்கும் கார்த்திக், ஏன் நீங்க உண்மை தெரிஞ்சும் அதை மறைக்கிறீங்க. ஒரு பெண்ணோட வாழ்க்கை. அது கேட்டு போக கூடாது என ஆதங்கத்தோடு பேசுகிறான். இதை சாமுண்டீஸ்வரி கேட்க நெருடுகிறது. கார்த்திக் மிகவும் நல்லவன் என்பதை புரிந்து கொள்கிறாள். ரேவதி திருமண விஷயத்தில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay: 20 ஆண்டுகளுக்கு முன்பே விஜய்க்கு அரசியலில் குதிக்க தயாராகிவிட்டார்.! பிரபல இயக்குனர் சொன்ன உண்மை.!
Recommended image2
ஜனனியை காப்பாற்றிய ஆலிவர் தேவசகாயம் யார்? எதிர்நீச்சல் சீரியலில் காத்திருக்கும் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
Music: மொத்தம் பத்து.! அத்தனையும் கெத்து.! எக்காலத்திற்கும் ஏற்ற 10 எஸ்.பி.பி பாடல்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved