கார்த்தியின் பிறந்த நாளை கொண்டாட தயாரான ரேவதி: கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam 2 Karthik Raja Birthday Celebration : கார்த்தியின் பிறந்தநாளை அறிந்து கொண்ட ரேவதி எப்படியாவது தனது காதலை சொல்லிவிட வேண்டும் என்று ஆசையோடு காத்துக் கொண்டிருக்கிறார். அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஜீ தமிழ் கார்த்திக் ராஜா பிறந்தநாள்
Karthigai Deepam 2 Karthik Raja Birthday Celebration : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்றுதான் கார்த்திகை தீபம் 2. முதல் சீசன் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 2ஆவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிலையில் தான் கார்த்திகை தீபம் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதிக்கு கார்த்தியின் பிறந்தநாள் பற்றி அவரது பாட்டி சொல்லவே ரேவதியும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கிவிட்டார்.
கார்த்திக் ராஜா பிறந்தநாள்
அதாவது, ரேவதி பரமேஸ்வரி பாட்டியை கோயிலில் வைத்து சந்திக்க அவர் நாளைக்கு பிறந்த நாள் என்று சொல்ல ரேவதி சந்தோஷம் அடைகிறாள். கார்த்தியின் பிறந்த நாளை கொண்டாட திட்டமிடுகிறாள். இதையடுத்து ஜானகி ரோட்டில் நடந்து செல்ல அந்த வழியாக வந்த சந்திரகலா காரில் இடித்து கீழே விழுந்து அடிபடுகிறது. இதையடுத்து சந்திரகலா ஜானகியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று ட்ரீட்மெண்ட் கொடுக்கிறாள்.
மைதிலி வீட்டை நோட்டம் விட்ட சந்திரலேகா
பிறகு வீட்டில் விட்டு விடுவதாக சொல்ல ஜானகி என் மருமகள் மைதிலி இருப்பதாக சொல்லி போன் செய்ய மைதிலி எனக்கு இடம் தெரியாது என கார்த்திக்கு தகவல் கொடுக்கிறாள். கார்த்திக் ஹாஸ்பிடல் வர சந்திரகலா இதை பார்க்கிறாள். மகேஷை பார்க்க வந்திருக்கலாம் என பின் தொடர அவன் ஜானகியை சந்தித்து பேசுகிறான்.
துர்கா நவீன் திருமணம்
இருவரும் அத்தை, மாப்பிள்ளை என பேச சந்திரகலா சந்தேகம் அடைகிறாள். பிறகு கார்த்திக் ஜானகியை வீட்டுக்கு அழைத்து வந்து பேச ரேவதி நல்ல பொண்ணு என பேசுகின்றனர். கார்த்திக் கிளம்பியதும் சந்திரகலா உள்ளே வந்து நலம் விசாரிக்கிறாள். அடுத்து தீபா போட்டோவை பார்த்து யார் என்று கேட்க என்னுடைய மகள் இறந்து விட்டாள். மாப்பிள்ளை பாரீனில் இருப்பதாக சொல்கிறாள். மறுபக்கம் ரேவதி கார்த்தியின் பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்கிறாள்.
கார்த்திக் மற்றும் சந்திரகலா
ஏற்கனவே கார்த்திக் மற்றும் சந்திரகலா இருவரும் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொண்டனர். அதாவது துர்காவிற்கும் நவீனுக்கும் திருமணம் செய்து வைப்பேன் என்று கார்த்திக்கும், உன்னை பாட்டியின் பேரன் என்று நிரூபித்து, அபிராமியின் மகன் என்பதை வெளிப்படுத்தி எப்படியாவது இந்த வீட்டைவிட்டு விரட்டிவிடுவேன் என்று சவால்விடுகிறார்.