கார்த்திக் ராஜாவிற்கு எதிராக பிளான் போட்ட சந்திரலேகா – கணவருக்காக ஸ்கெட்ச் போட்ட ரேவதி!
Karthigai Deepam 2 Indraya Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் தனது கணவரை காப்பாற்ற ரேவதி போடும் ஸ்கெட்ச் தான் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கார்த்திகை தீபம் 2 சீரியல்
இளம் ரசிகர்கள் சினிமா மீது ஆர்வம் என்றால் வீட்டிலுள்ள பெரியவர்கள் மற்றும் பெண்களுக்கு சீரியல்கள் மீது ஆர்வம் அதிகம். காலையில் தொடங்கி இரவு வரையில் ஒவ்வொரு சேனல்களிலும் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அப்படி ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்கள் தினந்தோறும் நம் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட சம்பவங்களை மையப்படுத்தி தான் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.
கணவருக்கான ஸ்கெட்ச் போட்ட ரேவதி
அப்படி ஒரு சீரியல் தான் ஜீ5 தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் அந்த சீரியலுக்கு பெயர் கார்த்திகை தீபம் 2. முதல் சீசனை வெற்றிகரமாக முடித்த ஜீ5 தமிழ் தொலைகாட்சி இப்போது 2ஆவது சீரியலையும் வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்து வருகிறது. மேலும், முதல் சீசனில் சிட்டி வாழ்க்கை என்றால், 2ஆவது சீசனில் கிராமத்து வாழ்க்கை. ரொம்ப எல்லாம் வித்தியாசம் கிடையாது.
கார்த்திகை தீபம் 2 - சுவாதி வெற்றி பெற்றாரா?
ரொம்பவே சிம்பிளான கதைக்களத்துடன் காட்சி அமைப்பை மட்டும் மாற்றி கார்த்திகை தீபம் 2 ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நித்தம் நித்தம் புதுவிதமான சுவாரஸ்யமான காட்சிகளை இந்த சீரியலில் காண முடிகிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடி ஒரு போலீஸ் அதிகாரிக்கு இருக்க வேண்டிய எல்லா அம்சங்களையும் கொண்ட ஹீரோ கார்த்திக் தனது அத்தை மகள் சுவாதிக்காக நகையை திருடி சுவாதியின் பையில் வைத்தவரை எளிதாக கண்டுபிடிக்கிறார்.
கார்த்திகை தீபம் 2 இன்றைய எபிசோடு
இது சுவாதியை கைது செய்ய வந்த போலீஸ் அதிகாரி கண்டு பிடிக்க வேண்டிய வேலை. இதை ஹீரோ கண்டுபிடித்து சுவாதியை காப்பாற்றி போட்டி நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறார். இதைப் பற்றிய தொடர்ச்சி தான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம். ஜீ5 நடத்தும் பாட்டு போட்டியில் கிருஷ்ணனின் மகள் பாடிக் கொண்டிருக்க சுவாதியை அழைத்துக் கொண்டு செல்கிறார் கார்த்திக். அப்போது சுவாதி என்னை பாட அனுமதிக்க மாட்டார்கள் என்று புலம்பிக் கொண்டிருக்க, கார்த்திக் அவரை சமாதானப்படுத்தி போட்டி நடக்கும் இடத்திற்கு கூட்டி செல்கிறார். போட்டியில் பங்கேற்று நல்லபடியாக பாடி முடிக்க அவர் தான் போட்டியின் வெற்றியாளராகவும் அறிவிக்கப்படுகிறார். இதையெல்லாம் முத்துவேல் வீடியோ எடுத்து சந்திரகலாவிற்கு அனுப்பி வைக்கிறார்.
கார்த்திகை விரட்ட பிளான் போட்ட சந்திரகலா
இதையடுத்து வீட்டிற்கு சென்ற சுவாதிக்கு ரேவதி ஆரத்தி எடுத்து வரவேற்றாள். அப்போது ரேவதியை தனியாக அழைத்து சென்ற சந்திரகலா கார்த்திக்கை இந்த வீட்டை விட்டு துரத்த தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரேவதி சந்திரகலாவின் போனை திருடி வீடியோ ஆதாரத்தை எல்லாம் அழிக்கிறார்.
அதன் பிறகு சந்திரகலாவின் திட்டப்படி கார்த்திக் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாரா? இல்லை வேறு ஏதேனும் சதி வேலை நடந்ததா? என்பது தான் கார்த்திகை தீபம் 2 சீரியலின் இன்றைய அப்டேட். முழுவதும் தெரிந்து கொள்ள இன்றைய எபிசோடை பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.