பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிய சுல்தான்... அடுத்த ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
First Published Dec 31, 2020, 2:05 PM IST
மாஸ்டர் படத்திற்கு அதிக அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதால் கடுப்பான சுல்தான் பட தயாரிப்பாளர்கள் ஓடிடியில் வெளியிட உள்ளதாக வதந்தி பரவியது.

கடந்த ஆண்டு தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படமும், கார்த்தியின் ‘கைதி’ திரைப்படமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. வசூல் ரீதியாக ‘பிகில்’ திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்தது. அதேபோல் வசூல், விமர்சன ரீதியாக ‘கைதி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

‘கைதி’ படத்தின் வெற்றியைப் பார்த்து தான் தளபதி விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்கு லோகேஷ் கனகராஜை ஓ.கே.செய்தார். தற்போது விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?