karthi sardar movie : வசூலில் சாதனை படைத்த கார்த்தியின் சர்தார்...எவ்வளவு தெரியுமா?
நேர்மறையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் உலக அளவில் சுமார் 100 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Image: Official film poster
தென்னிந்திய சினிமாவுலகில் மிக அரியப்பட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் கார்த்தி. சமீபத்தில் இவர் வந்திய தேவனாக நடித்த பொன்னியின் செல்வன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதில் கார்த்தியின் நடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து பான் இந்தியா ரசிகர்களை இவர் பக்கம் ஈர்த்தது.
முத்தையா இயக்கத்தில் இவர் நாயகனாக நடித்த விருமன் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து சர்தார் படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்றிருந்தது.
மேலும் செய்திகளுக்கு...bigg boss tamil 6 promo : பலகாரக்கடை வைக்கும் சமந்தா..புதிய டாஸ்க் என்ன தெரியுமா? ப்ரோமோ இதோ
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் பல ஆண்டு காத்திருப்பிற்குப் பிறகு வெளியான படமாகும். கார்த்தி இரட்டை வேடத்தில் தோன்றியிருந்தார். அப்பா மகன் என இரு வேடத்தில் நாயகன் தோன்றிய இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஷிதா விஜயன், லைலா, ரித்திக், முனீஸ்காந், அஸ்வின் குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
sardar
இதன் மூலம் ஹிந்தி திரைப்பட நடிகர் பாண்டே தமிழுக்கு அறிமுகமாக இருந்தார். அதோடு 16 ஆண்டுகளுக்குப் பிறகு லைலா தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். ஜி.வி பிரகாஷ் இசை அமைப்பில் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் வெளியாகி இருந்தது இந்த படம். 3 ஆண்டுகளாக படபிடிப்பில் இருந்த சர்தார் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் கடந்த தீபாவளி விருந்தாக படம் வெளியாகி இருந்தது.
மேலும் செய்திகளுக்கு...Samantha : ஷவர்..ஷேவ்..ஷோ அப்..கவலையை மறக்க துடிக்கும் சமந்தாவின் புதிய புகைப்படங்கள் ...
அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. உளவாளி திரை கதையைக் கொண்ட இந்தப் படம் இது முதல் வாரத்தில் நல்ல வசூலை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது படம் உலக அளவில் பெற்ற வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேர்மறையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் உலக அளவில் சுமார் 100 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.