viruman ரசிகர்கள் சூழ மாஸ் போஸ் கொடுக்கும் கார்த்தி; விருமன் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்
Viruman விருமன் திரைப்பட படப்பிடிப்பின் போது ரசிகர்களுடன் கார்த்தி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
viruman movie
முத்தையா இயக்கத்தில் 2015 ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
viruman
6 வருடம் கழித்து மீண்டும் இணைந்துள்ள முத்தையா -கார்த்தி கூட்டணியில் மீண்டும் கிராமத்து கதாநாயகன் சார்ந்த கதை களம் உருவாகிறது.
viruman
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த படத்திற்கு "விருமன்" என பெயரிடப்பட்டுள்ளது. ஜெய் பீமை தொடர்ந்து கார்த்தியின் விருமன் படத்தை சூர்யா தயாரிக்கிறார்.
viruman
இதன் இசை பணிக்காக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமிக்கியுள்ளார். மதுரை, தேனி என தற்போது பிஸியாக நடைபெற்று வரும் இந்த படத்தின் கலை இயக்குனராக அசுரன் புகழ் ஜாக்கி பணியாற்றி வருகிறார்.
viruman
கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கும் இதில் ராஜ்கிரண்,சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.
viruman
படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களையும், திரையுலக ஆர்வலர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.
viruman
நீண்ட நாட்களுக்குப் பிறகு கார்த்தி முழுக்க முழுக்க கிராமிய ஆக்ஷன் படத்தில் நடிப்பது சுவாரஸ்யத்தை மேலோங்க செய்துள்ளது.
viruman
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் அடுத்த ஆண்டு திரை காண உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.