பொன்னியின் செல்வன் முதல் பாகமே இவ்வளவு பெரிய படமா..! வெளியானது ரன்னிங் டைம்
Ponniyin selvan : மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ரன்னிங் டைம் வெளியாகி உள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். மூன்று ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் தயாராகி உள்ள இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீசாக உள்ளது. அதன்படி முதல் பாகத்தை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இடையிடையே இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் தவிர படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அதேபோல் முதல் பாடலை நடிகர்கள் கார்த்தி, ஜெயராம் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
இதையும் படியுங்கள்... இந்த மனசு யாருக்கு வரும்... கோலிவுட்டில் புது டிரெண்டை உருவாக்கிய நடிகர் கார்த்தி - பாராட்டும் ரசிகர்கள்
இந்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் கார்த்தி மற்றும் விக்ரம் ஆகியோர் கலந்துகொண்டனர். வருகிற செப்டம்பர் முதல் வாரத்தில் இப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு டிரைலரை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
Image: PR Agency
இவ்வாறு இப்படம் குறித்து ஒவ்வொரு அப்டேட்டாக தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் மொத்த 2 மணிநேரம் 50 நிமிடங்கள் ரன்னிங் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் முதல் பாகமே இவ்வளவு பெரிய படமா என வாயடைத்துப் போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஸ்பெஷல் நாளில்... கையில் மதுவை வைத்துக்கொண்டு நிக்கியை கட்டி அணைத்து... ரொமான்டிக் ஹனி மூன் கொண்டாடும் ஆதி !