அதிதியுடன் ஜோடியாக கப்பலில் சென்ற கார்த்தி... மலேசியாவில் மாஸ் காட்டும் ‘விருமன்’ ஜோடி - வைரலாகும் போட்டோஸ்
Viruman : சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கி உள்ள விருமன் படத்தின் புரமோஷனுக்காக அப்படத்தின் ஹீரோ கார்த்தி மற்றும் ஹீரோயின் அதிதி ஆகியோர் மலேசியா சென்றுள்ளனர்.
நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா உடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வரும் இவர்கள், தற்போது விருமன் படத்தை தயாரித்து உள்ளனர். கார்த்தி நாயகனாக நடித்துள்ள இப்படத்தை முத்தையா இயக்கி உள்ளார். ஏற்கனவே கொம்பன் படத்தில் இணைந்து பணியாற்றிய இந்த கூட்டணி தற்போது இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.
இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். அவர் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரண், வடிவுக்கரசி, ஆர்.கே.சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இதையும் படியுங்கள்.... போதைக்கு அடிமையான நடிகை... தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். விருமன் படத்தின் மூலம் நடிகை அதிதி ஷங்கர் ஹீரோயினாக மட்டுமின்றி பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் இடம்பெறும் மதுர வீரன் என்கிற பாடலை அவர் யுவனுடன் சேர்ந்து பாடி உள்ளார். இப்பாடலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
விருமன் படம் வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி திரையரங்கில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால், இப்படத்தை புரமோட் செய்யும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இப்படத்தின் புரமோஷனுக்காக மலேசியா சென்றுள்ள நடிகர் கார்த்தி - அதிதி ஷங்கர் ஜோடி அங்கு கப்பலில் பயணித்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்.... குழந்தை பெற்ற பிறகும் குறையாத கிளாமர்... கடற்கரையில் விதவிதமான கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை விஜயலட்சுமி