பிரபாஸுக்கு ஜோடியாக இரண்டு குழந்தைகள் பெற்ற நடிகையா? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!
பாகுபலி நாயகன் பிரபாஸுக்கு (Prabhas) ஜோடியாக இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுவது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து இரண்டு பாகங்களாக வெளியான 'பாகுபலி' திரைப்படத்தின் மூலம், உலகம் முழுவதும் அறியப்பட்ட நாயகனாக மாறிய பிரபாஸ் தற்போது அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
முழு நீல காதல் காவியமாக எடுக்கப்பட்டுள்ள 'ராதேஷ்யாம்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக 'அதிபுருஷ்' , 'சலார்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து சமீபத்தில், நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை 'மகாநடி' என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்து, மிகப்பெரிய ஹிட் கொடுத்தது மட்டும் இன்றி, தன்னுடைய முதல் படத்திலேயே நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை பெற்று தந்த இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க உள்ள படத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளார்.
சமீபத்தில் நடிகர் பிரபாஸ் தனது 25-வது திரைப்படம் பற்றிய அறிவிப்பை இந்த படத்திற்கு 'ஸ்பிரிட்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்கிற தகவல் வெளியானது.
தற்போது இந்த படம் குறித்து வெளியாகியுள்ள தகவலில் பிரபல பாலிவுட் நடிகை கரீன கபூர் கதாநாயகியாக நடிக்க போவதாக கூறப்படுகிறது.
சந்திப் ரெட்டி இயக்க இருக்கும் இந்த திரைப்படம் தெலுங்கு தமிழ் இந்தி மலையாளம் கன்னடம் ஆகிய எட்டு மொழிகளில் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இளம் நாயகிகளுடன் ஜோடி போட்டு வரும் பிரபாஸ் முதல் முறையாக, இரண்டு குழந்தைகளை பெற்ற நடிகை ஒருவருடன் நடிக்க உள்ளதாக கூறப்படுவது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.