MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஓடிடியிலும் கெத்து காட்டும் காந்தாரா... அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 5 மூவீஸ் இதோ

ஓடிடியிலும் கெத்து காட்டும் காந்தாரா... அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 5 மூவீஸ் இதோ

ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களில் அதிக வியூஸ் அள்ளிய மூவீஸ் லிஸ்டை ஓர்மேக்ஸ் தளம் வார வாரம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் அதிக வியூஸ் அள்ளிய படங்களை பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : Nov 19 2025, 09:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Top 5 Most Watched Movies on OTT
Image Credit : Social Media

Top 5 Most Watched Movies on OTT

இன்றைய காலகட்டத்தில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை விட ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கே அதிக வரவேற்பு கிடைக்கிறது. கடந்த வாரம் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் மீடியா வெளியிட்டுள்ளது. அரை மணி நேரத்திற்கு மேல் பார்த்த பார்வையாளர்களைக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில் 'காந்தாரா 1' கலக்கி வருகிறது. டாப் 5 ஓடிடி படங்கள் என்னவென்று பார்ப்போம்.

26
டாப் 1-ல் காந்தாரா சாப்டர் 1
Image Credit : Getty, Hombale Films

டாப் 1-ல் காந்தாரா சாப்டர் 1

'காந்தாரா சாப்டர் 1' கடந்த மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்தப் படம், 800 கோடிக்கு மேல் வசூலித்தது. பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய இப்படம், அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகி 33 லட்சம் வியூஸ்களுடன் முதலிடத்தில் உள்ளது.

Related Articles

Related image1
ஓடிடி-யில் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் உடன் கூடிய டாப் 5 சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வெப் சீரிஸ்...!
Related image2
பைசன் முதல் நடு சென்டர் வரை... இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் & வெப் சீரிஸ் முழு லிஸ்ட் இதோ
36
டாப் 2-ல் 'பாரமுல்லா'
Image Credit : Movie Stills

டாப் 2-ல் 'பாரமுல்லா'

இரண்டாவது இடத்தில் 'பாரமுல்லா' என்ற இந்திப் படம் உள்ளது. இது ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரைப்படம். நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் இந்தப் படம், கடந்த வாரத்தில் 30 லட்சம் வியூஸ்களைப் பெற்று ஓடிடியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

46
டாப் 3-ல் 'லோகா சாப்டர் 1'
Image Credit : X

டாப் 3-ல் 'லோகா சாப்டர் 1'

மூன்றாவது இடத்தில் மலையாளப் படமான 'லோகா சாப்டர் 1 : சந்திரா' உள்ளது. துல்கர் சல்மான் தயாரித்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி, 27 லட்சம் வியூஸ்களுடன் 3வது இடத்தில் உள்ளது.

56
டாப் 4-ல் அக்‌ஷய் குமாரின் 'ஜாலி எல்எல்பி 3'
Image Credit : Film

டாப் 4-ல் அக்‌ஷய் குமாரின் 'ஜாலி எல்எல்பி 3'

நான்காவது இடத்தில் பாலிவுட் படமான 'ஜாலி எல்எல்பி 3' உள்ளது. அக்‌ஷய் குமார் நடித்த இந்த லீகல் காமெடி டிராமா, திரையரங்குகளில் சுமாரான வரவேற்பையே பெற்றது. ஆனால் நெட்ஃபிளிக்ஸில் 22 லட்சம் வியூஸ்களுடன் 4வது இடத்தில் உள்ளது.

66
டாப் 5-ல் ஹாலிவுட் படமான 'தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்'
Image Credit : x/marvels

டாப் 5-ல் ஹாலிவுட் படமான 'தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்'

இந்திய ஓடிடியில் ஹாலிவுட் படமான 'தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்' டாப் 5-ல் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் இப்படம், 20 லட்சம் வியூஸ்களுடன் கலக்கி வருகிறது. திரையரங்குகளில் 4000 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம், ஓடிடியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!
Recommended image2
கென் கருணாஸ் இயக்கிய படத்திற்கு தளபதி பட தலைப்பு! விஜய் மீது கொண்ட பாசத்தால் வைத்த அந்த பெயர் - வைரலாகும் தகவல்!
Recommended image3
திருமணத்திற்குப் பிறகு செம பிஸி! ராஷ்மிகா மந்தனா கையில் வரிசையாக 6 மெகா படங்கள் - 'நேஷனல் கிரஷ்' அதிரடி!"
Related Stories
Recommended image1
ஓடிடி-யில் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் உடன் கூடிய டாப் 5 சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வெப் சீரிஸ்...!
Recommended image2
பைசன் முதல் நடு சென்டர் வரை... இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் & வெப் சீரிஸ் முழு லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved