வாலியின் பாடல் வரிகளால் இம்பிரஸ் ஆகி... விஸ்கியை பரிசாக கொடுத்த கண்ணதாசன்!!
கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகளை கேட்டு மெர்சலான கண்ணதாசன் அவருக்கு விஸ்கி ஒன்றை பரிசாக வழங்கிய சம்பவம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Vaali, Kannadasan
தமிழ் சினிமாவில் கடந்த 1968-ம் ஆண்டு வெளிவந்த படம் கண்மலர். இப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி, செளகார் ஜானகி என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கேவி மகாதேவன் இசையமைத்து இருந்தார். இப்படத்தின் கதைப்படி வி நாகய்யா கோவிலில் ஓதுவாராக இருப்பார். இவரின் மகளாக சரோஜா தேவி நடித்திருப்பார். அவர் கோவிலில் மாலை கட்டி படைக்கும் வேலையை செய்து வருவார். சரோஜா தேவியின் தோழியாக செளகார் ஜானகி நடித்திருப்பார்.
vaali
ஒரு கட்டத்தில் நாகய்யா இறந்துவிட, தனிமையில் வாழும் சரோஜா தேவிக்கு ஜெமினி கணேசன் மீது காதல் ஏற்படுகிறது. இவர்கள் திருமணத்துக்கு தடை வந்துவிடுவதோடு சரோஜா தேவிக்கு கண்பார்வையும் போய்விடும். தன் தோழியின் மீது கொண்ட நட்பால், தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளும் செளகார் ஜானகி, தான் இறந்த பின்னர் தன் கண்ணை எடுத்து சரோஜா தேவிக்கு வைத்துவிடச் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். கண்மாற்று அறுவை சிகிச்சைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் இப்படம் எடுக்கப்பட்டது.
kannadasan
இந்தப் படத்தில் கவிஞர்கள் வாலி மற்றும் கண்ணதாசன் இருவருமே பாடல்களை எழுதி இருந்தனர். அப்படி கண்மலர் படத்தில் இடம்பெறும் ‘ஓதுவார் உன் பெயர் ஓதுவார்’ என்கிற பாடலை கேட்ட கண்ணதாசன் நானா இவ்வளவு சிறப்பாக எழுதியிருக்கிறேன் என்று தனது உதவியாளரிடம் கேட்க, அதற்கு அவர், இது வாலி எழுதிய பாட்டு ஐயா என சொன்னதும், மெய்சிலிர்த்து போன கண்ணதாசன், உடனடியாக வாலிக்கு போன் போட்டு பாராட்டி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளியை இழுத்து மூடிவிட்டு விஜய் டிவி தொடங்கும் புது குக்கிங் ஷோ
Lyricist Vaali
அப்படி வாலி எழுதிய அந்த பாடல் வரிகளில் கண்ணதாசனை மிகவும் கவர்ந்தது, “கங்கைகொண்டான் என்மேல் கருணை கொண்டான், பாதி மங்கை கொண்டான் எந்தன் மனதைக் கொண்டான்... திரை திங்கை கொண்டான், நெஞ்சை திருடிக் கொண்டான்; இதை யாவையும் கொண்டான், எந்தன் மாலையும் கொண்டான்” என்கிற வரிகள் தான். இதைக்கேட்டதும் தேவாரத்தில் வரும் வரிகளை தான் பயன்படுத்தி இருப்பதாக நினைத்தாராம் கண்ணதாசன்.
Poet Kannadasan
பின்னர் தான் வாலி இந்த வரிகளை எழுதியது அவருக்கு தெரியவந்திருக்கிறது. உடனே வாலிக்கு போன் போட்டு அசத்திட்டய்யா என வாழ்த்தியதோடு தன்னுடைய கார் டிரைவரிடம் ஒரு பரிசு கொடுத்திருக்கிறேன் வாங்கிக்கோ என சொல்லி இருக்கிறார். வாலிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது என்பதால் அவருக்கு பிடித்த விஸ்கியை தன் கார் டிரைவரிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறார் கண்ணதாசன். இதனால் பூரித்து போனாராம் வாலி.
இதையும் படியுங்கள்... கோடி கோடியாய் காசு இருந்தும் விமானத்தில் செல்ல முடியாது... ரிஸ்க் எடுத்து மகனின் கனவை நிறைவேற்றிய நெப்போலியன்