MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 90களில் டாப் ஹீரோயின்களாக கொடிகட்டிப் பறந்தவர்கள்... திடீரென சினிமாவை விட்டு காணாமல் போன டாப் 5 நடிகைகள் லிஸ்ட் இதோ

90களில் டாப் ஹீரோயின்களாக கொடிகட்டிப் பறந்தவர்கள்... திடீரென சினிமாவை விட்டு காணாமல் போன டாப் 5 நடிகைகள் லிஸ்ட் இதோ

The Forgotten Heroines of the 90s : தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த கனகா, சுவலட்சுமி உள்பட 5 நடிகைகள் சில படங்களில் காணாமல் போனார்கள்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 08 2026, 06:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Top 5 90s Actress
Image Credit : X

Top 5 90s Actress

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த பல நடிகைகள், அப்போது ரசிகர்களின் கனவுக்கன்னிகளாக இருந்தனர். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர்கள், ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினர். அந்த வகையில் 90களில் பிரபலமாக இருந்து பின்னர் திரையுலகில் இருந்து ஒதுங்கிய 5 நடிகைகளைப் பற்றி பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
அமலா
Image Credit : X

அமலா

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்தவர் அமலா. கொல்கத்தாவைச் சேர்ந்த இவர், மைதிலி என்னை காதலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.

ரஜினிகாந்துடன் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்த காலகட்டத்தில் இருவரையும் இணைத்து பல்வேறு கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் பின்னர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்ட அமலா, திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை பெருமளவில் குறைத்துக் கொண்டார். பின்னர் சமூக நலன் மற்றும் விலங்குகள் நலன் சார்ந்த பணிகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

36
சங்கீதா
Image Credit : X

சங்கீதா

90களில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பிரபலமாக இருந்த நடிகைகளில் சங்கீதாவும் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் கதாநாயகியாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

கமல்ஹாசனின் மகாநதி திரைப்படத்தில் காவிரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார். அதேபோல் ராஜ்கிரண் நடித்த எல்லாமே என் ராசாதான் படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

பின்னர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் சரவணனை திருமணம் செய்து கொண்ட சங்கீதா, படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டார். அதன் பின்னர் திரையுலகின் பக்கம் அவர் தலைகாட்டவே இல்லை.

46
கனகா
Image Credit : X

கனகா

90களின் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் கனகா. தனது முதல் படமான கரகாட்டக்காரன் மூலமே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். ராமராஜனுடன் நடித்த இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பிறகு ரஜினிகாந்த், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்த கனகா, ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து விலகினார். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகள் மற்றும் குடும்பச் சூழ்நிலைகள் அவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகின. நீண்ட காலமாக பொதுவெளியில் கூட தலைகாட்டாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார் கனகா.

56
சுவலட்சுமி
Image Credit : X

சுவலட்சுமி

90களில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட நடிகைகளில் முக்கியமானவர் சுவலட்சுமி. வங்காளத்தைச் சேர்ந்த இவர் 1994-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அஜித், விஜய், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

ஆசை, கோகுலத்தின் சீதை, நிலாவே வா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அவரது இயல்பான நடிப்பு, ஹோம்லி தோற்றம் மற்றும் தனித்துவமான முகபாவனைகள் 90களில் அவரை ரசிகர்களின் விருப்பமான நடிகையாக மாற்றின.

2001-ம் ஆண்டு விஞ்ஞானி ஒருவரை திருமணம் செய்து கொண்ட சுவலட்சுமி, அதன் பிறகு சினிமாவிலிருந்து முழுமையாக விலகினார். திருமணத்திற்குப் பிறகு வெளிநாடுகளில் வசித்து வந்ததாக கூறப்படும் நிலையில், திரையுலகில் இருந்து அவர் திடீரென விலகியது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

66
ரூபினி
Image Credit : X

ரூபினி

மும்பையைச் சேர்ந்த ரூபினி, தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். 1987 முதல் 1994 வரையிலான காலகட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சத்யராஜ், விஜயகாந்த், மோகன், ராமராஜன் என பல முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த மனிதன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரூபினி, அதன்பிறகு கூலிக்காரன், அபூர்வ சகோதரர்கள், என்ன பெத்த ராசா, உழைப்பாளி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 90களில் பிஸியான நடிகையாக இருந்த அவர், 1995-ம் ஆண்டு திருமணத்திற்குப் பிறகு திரையுலகில் இருந்து முழுமையாக விலகினார். அதன் பிறகு பொதுவெளியில் அவரது சினிமா வருகை மிகவும் குறைந்துவிட்டது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian 3 : வெயிட்டிங் லிஸ்டில் இருந்த இந்தியன் 3... மீண்டும் தூசிதட்டி எடுத்த ஷங்கர் - எப்போ ரிலீஸ் தெரியுமா?
Recommended image2
Nana Patekar : சினிமாவை தூக்கியெறிந்துவிட்டு நானா படேகர் கார்கில் போருக்கு சென்ற கதை தெரியுமா? சினிமாவில் வில்லன்... ஆனா நிஜத்தில் ஹீரோ!
Recommended image3
Bigg Boss Muthukumaran controversy: தாலி கட்டுவதாகக் கூறி ஏமாற்றினாரா? பிக் பாஸ் முத்துக்குமரன் மீது இளம்பெண் புகார்... தற்கொலை முயற்சியால் பரபரப்பு!
Related Stories
Recommended image1
லயோலா காலேஜில் இத்தனை டாப் ஹீரோஸ் படிச்சிருக்காங்களா? அசர வைக்கும் லிஸ்ட் இதோ
Recommended image2
Top 5 Flop Movies : ஓவர் ஹைப் ஏத்தி ஓடாமல் போன டாப் 5 தமிழ் பிளாப் படங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved