இன்னும் இத்தனை திருமணம் பாக்கி இருக்கு! கமல்ஹாசன் கொடுத்த தக் லைஃப் ரிப்ளை
நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது, திருமணம் பற்றி பேசி இருக்கிறார்.

Kamalhaasan Says About Marriage : தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் இணைந்து நாயகன் படத்தில் பணியாற்றினர். அதன்பின்னர் 38 ஆண்டுகளாக இணையாமல் இருந்த இந்த கூட்டணி தற்போது தக் லைஃப் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட், ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளது.
Kamalhaasan - Maniratnam
Thug Life பாடல் வெளியீட்டு விழா
தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், சானியா மல்கோத்ரா, ஜோஜு ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ஜிங்குச்சா பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதன் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன், செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இதையும் படியுங்கள்... சிம்பு பாசத்தில் அப்பாவையே மிஞ்சிவிட்டார்! தக் லைஃப் நிகழ்ச்சியில் கமல் எமோஷ்னல்!
Kamalhaasan
திருமணம் பற்றி பேசிய Kamalhaasan
அதில் கமல்ஹாசன் இரண்டு திருமணம், செய்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தனது பழைய நேர்காணல் ஒன்றை நினைவுகூர்ந்து பதிலளித்தார். அதன்படி எம்.பி.ஜான் பிரிட்டாஸ் தன்னை பேட்டி எடுத்தபோது, பிராமண குடும்பத்தில் இருந்து வந்த நீங்கள் இரண்டு திருமணம் செய்துகொண்டது ஏன் என கேள்வி எழுப்பினார். அதற்கு கமல்ஹாசன், பிராமண குடும்பத்தில் இருந்து வருவதற்கும், கல்யாணம் பண்ணுவதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என கேட்டிருக்கிறார்.
Kamalhaasan Says about Marriage
கமல்ஹாசனின் Thug Life ரிப்ளை
உடனே பிரிட்டாஸ், நீங்க கும்பிடுகிற தெய்வம் ராமனாச்சே, அவரை பின் தொடர வேண்டாமா என கேட்டாராம். இதற்கு கமல் கொடுத்த பதில் தான் செம என்றே சொல்லலாம். அவர் கூறியதாவது : நான் சாமி கும்பிடுறது இல்ல. அப்படி பார்த்தால் கூட நான் ராமனுடைய அப்பா வகையறா, இன்னும் 49 ஆயிரத்து சொச்சம் பாக்கி இருக்கு என சொல்லி இருக்கிறார். கமல்ஹாசனின் இந்த பதில் வைரலாகி வருகிறது. அவர் வாணி கணபதி மற்றும் சரிகாவை திருமணம் செய்துகொண்டார். இந்த இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கமல் எழுதிய ‘ஜிங்குச்சா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சிம்பு - வைரலாகும் தக் லைஃப் பர்ஸ்ட் சிங்கிள்