Kamalhaasan new movie : விருமனும்... விருமாண்டியும் - பிக்பாஸ் விலகலுக்கு பின் கமல் அமைத்த சர்ப்ரைஸ் கூட்டணி
Kamalhaasan new movie : தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், அண்மையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
பன்முகத்திறமை கொண்ட கலைஞன் கமல்
தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வருபவர் கமல்ஹாசன். இவர் கடந்த சில வருடங்களாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும், படங்களில் நடிப்பதையும், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதையும் தொடர்ந்து வருகிறார்.
விக்ரம் ரெடி
இவர் நடிப்பில் தற்போது விக்ரம் படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கைவசம் உள்ள படங்கள்
இதுதவிர ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, பா.ரஞ்சித் உடன் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் உடன் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார் கமல். இந்நிலையில், தற்போது அவர் மேலும் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முத்தையா உடன் கூட்டணி
அதன்படி மருது, கொம்பன், குட்டிப்புலி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் முத்தையா உடன் கமல் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கமலை சந்தித்து இயக்குனர் முத்தையா கதை ஒன்றை சொன்னதாகவும், அந்தக் கதை கமலுக்கு பிடித்துப்போனதால், நடிக்க ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
விருமன் படம் ரிலீசுக்கு தயார்
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் தற்போது விருமன் படம் தயாராகி உள்ளது. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற மே மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Income Tax Raid : ரூ.1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு.... ஐடி ரெய்டில் வசமாக சிக்கிய விடுதலை பட தயாரிப்பாளர்