Vikram : திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வரும் விக்ரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா? - லீக்கான தகவல்
Vikram OTT release date : 2 வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வரும் விக்ரம் திரைப்படம் ஓடிடி-யில் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, சூர்யா, காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத், பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
அனிருத் இசையமைத்திருந்த இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் கடந்த ஜூன் 3-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட்டது. வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
குறிப்பாக இப்படம் தமிழகத்தில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.155 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்த பாகுபலி 2 படத்தின் சாதனையை கமலின் விக்ரம் திரைப்படம் அண்மையில் முறியடித்து ஆல் டைம் ரெக்கார்டை தன்வசப்படுத்தியது.
2 வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வரும் விக்ரம் திரைப்படம் ஓடிடி-யில் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை வருகிற ஜூலை மாதம் 8-ந் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு கிடைக்கும் அதீத வரவேற்பால் இந்த ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... அடுத்தது ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகமா? புதுப்பேட்டை 2-ம் பாகமா?... சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட செல்வராகவன்