Vikram : அண்ணாத்த வசூல் சாதனையை முதல் நாளிலேயே அடிச்சு தூக்கிய விக்ரம்... பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் கமல்
Vikram Boxoffice : ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை கமலின் விக்ரம் படம் முறியடித்துள்ளது. அதுமட்டுமின்றி கமலின் கெரியரில் முதல் நாளில் அதிக தொகை வசூலித்த படமாக விக்ரம் மாறி உள்ளது.
கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள விக்ரம் படம் நேற்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீசானது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில், நரேன், சிவானி, மைனா நந்தினி, மகேஸ்வரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், சார்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு ஸ்ட்ண்ட் மாஸ்டர்களாக அன்பறிவு பணியாற்றி உள்ளனர். உலகமெங்கும் 5 அயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்ட இப்படம் தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசானது.
ரிலீசானது முதல் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். படம் மிகவும் மாஸாக இருப்பதாகவும் பகத் பாசில், கமல், விஜய் சேதுபதியின் நடிப்பு வேற லெவலில் இருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படம் ரிலீசான முதல் நாளில் 34 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை கமலின் விக்ரம் படம் முறியடித்துள்ளது. அதுமட்டுமின்றி கமலின் கெரியரில் முதல் நாளில் அதிக தொகை வசூலித்த படமாக விக்ரம் மாறி உள்ளது.
இதையும் படியுங்கள்... Vikram Movie Review : கமல் - லோகேஷ் கூட்டணி மிரட்டலா? சொதப்பலா? - விக்ரம் படத்தின் முழு விமர்சனம் இதோ