MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vikram movie : வெளிநாட்டில் இசை வெளியீட்டு விழா.... விக்ரம் படத்துக்காக கமல் போட்ட மாஸ்டர் பிளான்

Vikram movie : வெளிநாட்டில் இசை வெளியீட்டு விழா.... விக்ரம் படத்துக்காக கமல் போட்ட மாஸ்டர் பிளான்

Vikram movie : லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தை மிகப்பெரிய அளவில் புரமோட் செய்ய திட்டமிட்டுள்ள நடிகர் கமல் அதற்கான பணிகளையும் செய்து வருகிறார். 

1 Min read
Author : Ganesh A
Published : Apr 19 2022, 09:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மாநகரம், மாஸ்டர், கைதி என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

24

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ஸ்டன்ட் இயக்குனர்களாக அன்பறிவு பணியாற்றியுள்ளனர். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

34

விக்ரம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விக்ரம் படத்தை மிகப்பெரிய அளவில் புரமோட் செய்ய திட்டமிட்டுள்ள நடிகர் கமல் அதற்கான பணிகளையும் செய்து வருகிறார். இது பான் இந்தியா படமாக வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

44

இந்நிலையில், விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ள நடிகர் கமல்ஹாசன், அதனை துபாயில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற மே மாதம் முதல் வாரத்தில் இந்நிகழ்ச்சியை நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... SA Chandrasekar :பீஸ்ட் படம் பார்த்து.. நெல்சனை பொளந்துகட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
விஜய் சேதுபதி
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏ.ஆர்.ரகுமானை காதலித்த நடிகை... திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட அந்த நாயகி யார்?
Recommended image2
Pandian Stores 2 Today Episode : அஞ்சலி பற்றி கேட்ட மீனா... ஆடிப்போன சரவணன் - இன்றைய எபிசோடில் செம ட்விஸ்ட்
Recommended image3
Ayyanar Thunai : டைவர்ஸுக்கு நாள் குறித்த நிலா... அதிர்ச்சியில் சோழன் - அனல்பறக்கும் இன்றைய எபிசோடு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved