பிக்பாஸ் சீசன் 5 இறுதி போட்டியாளர்கள் இவர்கள் தானா? எதிர்பார்த்த யாருமே இல்லையே ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!!
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 (biggboss tamil 5) இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் யார் யார் உள்ளே செல்ல உள்ளவர்களின் இறுதி பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஏற்கனவே கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இல்லாதது பெருத்த ஏமாற்றம் என்றே கூறலாம்.
பிரபலங்களின் பொறுமை, புத்திசாலித்தனம், அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதம், நேர்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படையில் மக்கள் மனதிலும், உள்ளே இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் மனதிலும் இடம்பிடித்து 100 நாட்கள் வெற்றிகரமாக உள்ளே இருப்பவர்களே, இறுதியாக மக்கள் வாக்குடன் வெற்றிவாகை சூடுகிறார்கள்.
வெளியில் இருந்து பார்ப்பதற்கு இது சாதாரணமாக தெரிந்தாலும்... அங்கு இருக்கும் சூழ்நிலை அவர்களை சில சமயங்களில் சர்ச்சைக்குரிய மனிதராக நம் கண் முன் நிறுத்திவிடுகிறது. எனவே தான் பல பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும் போது நெகடிவ் இமேஜூடன் வருகிறார்கள்.
முன்பில் இதே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ள சில பிரபலங்கள் பற்றிய தகவல்கள் வெளியானாலும், பின்னர் அதில் உண்மை இல்லை என கூறப்பட்டது. அந்த வகையில் டிக் டாக் புகழ் ஜிபி முத்து (GP Muthu), பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் சம்யுக்தாவின் (Samyuktha) தோழி ப்ரதாயினி ஆகியோர் பிக்பாஸ் லிஸ்டில் இடம்பெற்றாலும் பின்னர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.
சரி இப்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க...
கானா இசைவாணி (பாடகி) Isaivani, ராஜு ஜெயமோகன் (Raju Mohan) (சின்னத்திரை நடிகர்), மதுமிதா (Madhumitha) (காஸ்ட்யூம் டிசைனர்), அபிஷேக் ராஜா (Abishek Raja) ( விமர்சகர்), அக்ஷரா ரெட்டி (Akshara Reddy) (மாடல்), நமிதா மாரிமுத்து (Namitha Marimuthu) (திருநங்கை), ப்ரீத்தி சஞ்சீவ் (Preethi sanjeev) (சின்னத்திரை நடிகை), பிரியங்கா தேஷ்பாண்டே (Priyanka) (விஜே), நிழல்கள் ரவி (Nizhalgal Ravi) (நடிகர்), பவானி ரெட்டி (bhavani Reddy) (மாடல், சீரியல் நடிகை), கோபிநாத் (Gopinath) (மாடல்), நிருப் நந்தகுமார் (Niroop Nandhakumar) (நடிகர்) ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில நிமிடங்களில் இது தான் இறுதி பாட்டியாலா? அல்லது இதிலும் மாற்றம் உள்ளதா என்பது தெரியவரும்.
அதே நேரத்தில் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் பட்டியலில், இடம்பெற்றிருந்த 'குக் வித் கோமாலி' கனி (cook with comali kani), சுனிதா (sunitha) மிலா (mila) (நடிகை ஷகீலாவின் மகள்), 'துள்ளுவதோ இளமை' புகழ் அபிநய் (abinay), வடிவுக்கரசி, ஐஸ்வர்யா, '90 எம்எல் 'புகழ் மசூம் சங்கர், 'மைனா' பட புகழ் சுசேன் ஜார்ஜ் (suzan George) உள்ளிட்ட உள்ளவர்கள் கலந்து கொள்ளாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றே கூறலாம்.