மீண்டும் படப்பிடிப்பில் கமலின் விக்ரம்..இந்த முறை லோகேஷ் இயக்கம் இல்லையாம்?
பட்டையை கிளப்பி வரும் கமலின் விக்ரம் படத்திற்கான ஓடிடி ப்ரோமோ தற்போது தடபுடலாக ரெடியாகி வருகிறதாம்.

vikram
நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தின் மூலம் கமல்ஹாசன் மீண்டும் பிரமாண்டமாக திரும்பியுள்ளார். இப்படம் தமிழகத்தில் ரூ 158.5 கோடியும், கேரளாவில் விக்ரம் ரூ 36.15 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் ஆக்ஷன் என்டர்டெய்னர் இந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வெளியானது.
vikram
'விக்ரம்' படம் வெளியாகி 15வது நாளில் ரூ.35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 2 நாட்களிலேயே ரூ.1.15 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கடைசி நாளான நேற்று தகவல் வெளியானது.
vikram movie
'விக்ரம்' படத்திற்கு எல்லா இடங்களிலிருந்தும் பரவலான பாசிட்டிவ் ரிப்போர்ட்கள் கிடைத்து வரும் நிலையில் இதன் ஓடிடி ரிலீசுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.இப்படம் ஜூலை 8ம் தேதி முதல் OTT தளத்தில் டிஜிட்டல் பிரீமியர் காட்சியை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் முதல் OTT இல், ஆனால் இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அதன் டிஜிட்டல் பிரீமியரை ஜூலை 8 ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ 98 கோடிக்கு விற்றுள்ளனர். இதை ஹாட் ஸ்டார் இணையதளம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
VIKRAM
ஓடிடிக்கான ப்ரோமோ தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. விக்ரம் படத்தில் கமல் பயன்படுத்திய துப்பாக்கி முதல் சகல பொருட்களும் கொண்டுவரப்பட்டு அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது. இது ஹாட் ஸ்டார் சார்பாக உருவாக்கப்படுவதால் லோகேஷ் தலையீடு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.