“இந்தியன் 2”- வை வச்சி தேர்தலுக்கு ஸ்கெட்ச் போடும் கமல்... மீண்டும் படப்பிடிப்பு எப்போது ஆரம்பம் தெரியுமா?

First Published Dec 11, 2020, 2:49 PM IST

ஆனால் தற்போது இந்தியன் 2 படம் குறித்து கமல் ஹாசன் எடுத்துள்ள அதிரடி முடிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது கிரேன் விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்பட 3 பேர் பலியாகினர், 10 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இடையில் கொரோனா பிரச்சனை காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமே 7 மாதத்திற்கு முடங்கியது. அதன் பின்னர் பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என இயக்குநர் ஷங்கருக்கு லைகா அழுத்தம் கொடுத்ததாகவும், அதையடுத்து ஷங்கரும் பட்ஜெட் மட்டுமில்லாது சம்பளத்தையும் குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

தற்போது படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுக்கப்பட்டாலும் இந்தியன் 2 படத்திற்கு 100 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு ஷூட்டிங் நடத்துவது சிரமம் என்பதால் ஷங்கர் படப்பிடிப்பை ஆரம்பிக்காமல் இருந்து வந்தார். மேலும் அடுத்தடுத்து வந்த தடங்கலால் இந்தியன் 2 படப்பிடிப்பையே நிறுத்திவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஷங்கரும் வேறொரு பட வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனால் நிச்சயம் இந்தியன் 2 படம் கைவிடப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கவலையடைந்தனர்.

ஆனால் தற்போது இந்தியன் 2 படம் குறித்து கமல் ஹாசன் எடுத்துள்ள அதிரடி முடிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதால் இந்தியன் 2 படம் தனக்கு தேர்தல் களத்தில் சூப்பரான இமேஜை ஏற்படுத்தும் என கமல் ஹாசன் திட்டமிட்டுள்ளாராம்.

எனவே ஜனவரி மாத இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் கமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் ஒரே மாதத்தில் தன் காட்சிகளை நடித்து முடிக்கவும் கமல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?