அடேங்கப்பா.. முதல் நாளில் கேரளாவில் மட்டும் இத்தனை கோடியா?..மாஸ் காட்டும் விக்ரம்!
நேற்று வெளியான கமலின் விக்ரம் படம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேரள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

vikram movie
நேற்று வெளியாகி திரையரங்குகளை அலறவிட்டு வரும் கமலின் விக்ரம் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 20 முதல் ரூ. 25 கோடி வசூலித்துள்ளதாகவும், சென்னையில் மட்டும் ரூ. 1.71 கோடி வரை வசூலித்துள்ளதாம். கூறப்படுகிறது. அதோடு புதிய தகவலாக கேரளாவில் மட்டும் படம் ரூ. 5 கோடி வரை முதல் நாளில் வசூலித்துள்ளதாக தெரிகிறது. மேலும் விடுமுறை நாட்களை குறிவைத்து ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்த படம் மூன்று நாட்களில் கட்டாயம் ரூ.100கோடியை எட்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
vikram movie
கைதி படத்துடன் ஒன்றிப்போகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த படம் பாசிட்டிவ் வைப்ரேஷனைகளுடன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 5 நிமிடங்களானாலும் சூர்யா மற்ற நாயகர்களை காட்டிலும் அதிகமாக பேசப்படுகிறார். ரசிகர்களின் அன்பிற்கு சூர்யா நன்றி கூறி பதிவிட்டிருந்தார். இதையடுத்து அடுத்த பார்ட்டில் சூர்யா மெயின் ரோலில் நடிக்கவுள்ள அப்டேட்டும் குதூகலப்படுத்தி வருகிறது.
vikram movie
மாஸ்டர், கைதி, மாநகரம் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜின் அடுத்த ஹிட்டாக விக்ரம் படம் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில் நரேன், காளிதாஸ் ஜெயராமன், சூர்யா, விஜய் சேதுபதி, காயத்ரி, சிவானி, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்..
vikram movie
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படத்தில் இசைக்கு அனிருத், ஒளிப்பதிவுக்கு கிரீஷ் கங்காதரன், ஸ்டண்ட்டுக்கு அன்பறிவு பணியாற்றியுள்ளனர்.. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா நேற்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது விக்ரம்.