தமிழகத்தில் மட்டும் விக்ரம் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
விக்ரம் படம் உலகம் முழுவதும் ரூ. 200 கோடியை எட்டிவிட்ட நிலையில் தமிழக வசூல் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

kamal haasan
நான்கு வருட காத்திருப்பாக இருந்தாலும் கமல்ஹாசனின் மாஸ் சம்பவமாக மாறிவிட்டது விக்ரம். இந்த படம் கமலின் மிகசிறந்த படங்களில் ஒன்றாக ரசிகர்கள் போற்றி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரமில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என நட்சத்திர பட்டாளமே ஜொலித்திருந்தது. திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, கமல் இயக்குனர் குறித்த உருக்கமான கடிதத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி ஊட்டி இருந்தார்.
Vikram
அந்த கடிதத்தில் “அன்பு லோகேஷ், பெயருக்கு முன் “திரு” போடாமல் விட்டது விபத்தல்ல. திரு.கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டுவிட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைகளுக்கான, பதவிக்கான மரியாதை பழைய படியே தொடரும், அயராது... விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள். உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும். உங்கள் நான்” என அந்த கடிதத்தில் கமல்ஹாசன் எழுதியுள்ளார்.
vikram
அதோடு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு விலையுயர்ந்த கார், உதவி இயக்குனர்களுக்கு ஆளுக்கொரு பைக் கொடுத்துள்ளார். விக்ரம் 3 யை உறுதி படுத்திய கமலின் வீடியோ மற்றும் லோகேஷுக்கு சாவியை ஒப்படைக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. லெக்ஸஸ் கார்கள் அறுபது லட்சம் ரூபாய் எக்ஸ்ஷோரூம் விலையில் தொடங்கி, இந்தியாவில் 2.5 கோடிகள் வரை செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
vikram
இந்நிலையில் உலகம் முழுவதும் வசூல் வேட்டை செய்து வரும் கமலின் விக்ரம் பாக்ஸ் ஆஃபீஸ் குறித்த செய்திகள் வைரலாகி வருகிறது. இதுவரை ரூ. 200 கோடியை எட்டிவிட்ட நிலையில் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் படம் நேற்று வரை ரூ. 100 கோடியை எட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.