MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 3 நாளில் ரூ.150 கோடி கலெக்‌ஷன் அள்ளிய விக்ரம்! விஜய், அஜித்தை ஓரங்கட்டி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடும் கமல்

3 நாளில் ரூ.150 கோடி கலெக்‌ஷன் அள்ளிய விக்ரம்! விஜய், அஜித்தை ஓரங்கட்டி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடும் கமல்

Vikram box office collection : கேரளாவில் இந்த ஆண்டு ரிலீசான தமிழ் படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக விக்ரம் மாறி உள்ளது. இதன்மூலம் பீஸ்ட் படத்தின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளது விக்ரம்.

1 Min read
Author : Ganesh A
Published : Jun 06 2022, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் விக்ரம். ஹாலிவுட் படங்களைப் போன்று மல்டிவெர்ஸ் படமாக இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருந்தார் லோகேஷ். அவரின் கதைக்கு உயிர்கொடுக்கும் விதமாக கமல்ஹாசன், சூர்யா, பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

24

விக்ரம் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இசைக்கு அனிருத், ஒளிப்பதிவுக்கு கிரீஷ் கங்காதரன், ஸ்டண்ட்டுக்கு அன்பறிவு, படத்தொகுப்புக்கு பிலோமின் ராஜ் என மிகப்பெரிய டெக்னிக்கல் டீமே இப்படத்தில் பணியாற்றி இருந்தது. கடந்த ஜூன் 3-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசானது.

34

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இது ரிலீசானதால், அனைத்து மொழிகளிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் இந்த ஆண்டு ரிலீசான தமிழ் படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக விக்ரம் மாறி உள்ளது. இதன்மூலம் பீஸ்ட் படத்தின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளது விக்ரம்.

44

அதேபோல் அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் விக்ரம் படம் வசூலில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், விக்ரம் படத்தின் 3 நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் மூன்றே நாளில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 

இதையும் படியுங்கள்... நெல்சன் மட்டும் போதாது... தலைவர் 169 படத்துக்காக மேலும் ஒரு பிளாக்பஸ்டர் இயக்குனரை களமிறக்கிய ரஜினி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் சேதுபதி
நடிகர் விக்ரம்
லோகேஷ் கனகராஜ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிசுகிசுக்களுக்கு இடையில் ஒரு மௌன ராகம்.! ராஷ்மிகா - விஜய் ஜோடியின் கியூட் லவ் ஸ்டோரி!
Recommended image2
சினிமாவில் சிகரெட் பிடிக்க மறுத்த சிங்கம்! கையிக்கு வந்த பணத்தை துச்சமாக தூக்கியெறிந்த டி.ஆர்!
Recommended image3
கார்த்திகை தீபம் ஷாக்: உண்மையை உடைத்த ஜோதிடர்! ரோகிணிக்கு அபார்ஷன் ஆனதா? இல்லையா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved