MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆயிரம் கோடிப்பு... கபாலி படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலை சொன்ன தாணு - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

ஆயிரம் கோடிப்பு... கபாலி படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலை சொன்ன தாணு - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

நானே வருவேன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேட்டியளித்த தயாரிப்பாளர் தாணு, கபாலி படத்தின் மொத்த வசூல் குறித்த ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Sep 30 2022, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீசான படம் கபாலி. கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்த இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி இருந்தார். கபாலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மலேசிய டான் ஆக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தேவும், அவரின் மகள் கதாபாத்திரத்தில் நடிகை தன்ஷிகாவும் நடித்திருந்தார்.

24

இப்படம் ரிலீசான சமயத்தில் மிகப்பெரிய அளவு எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் சில ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த சம்பவங்களும் அரங்கேறின. இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான கபாலி திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. சமீபத்திய பட விழா ஒன்றில் கூட கபாலி பட விமர்சனங்களால் தான் மன உளைச்சலுக்கு ஆளானேன் என கூறி இருந்தார். 

இதையும் படியுங்கள்... மணிரத்னம் நம்முடைய மிகப்பெரிய அடையாளம் - நடிகர் கார்த்தி எமோஷனல் பேச்சு

34

இந்நிலையில், தாணு தயாரித்துள்ள நானே வருவேன் திரைப்படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் தனுஷும், இயக்குனர் செல்வராகவனும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தாணு தான் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தார். அந்த வகையில் ஒரு பேட்டியில் அவரிடம் கபாலி படத்தின் மொத்த வசூல் குறித்து கேட்கப்பட்டது.

44

இதற்கு பதிலளித்த தாணு, அமெரிக்காவில் மட்டும் அப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதேபோல் அப்படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடிக்கு மேல் வரும். அவ்ளோ வசூல் செய்தது. வெளிநாட்டு வசூல் மூலம் மட்டுமே நிறைய வசூல் வந்தது என கூறி இருந்தார். அப்படம் ரிலீசான சமயத்தில் ரூ.650 முதல் ரூ.670 கோடி வசூலித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் ரூ.1000 கோடி வசூலித்ததாக கூறியதை கேட்டு ஷாக் ஆன நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய தனுஷின் நானே வருவேன்... முதல் நாள் வசூல் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பா. இரஞ்சித்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved