- Home
- Cinema
- குழந்தை பிறந்த பிறகும் குறையாத காதல்... கலக்கல் லுக்கில் கணவருடன் காஜல் அகர்வால் நடத்திய வேறலெவல் போட்டோஷூட்
குழந்தை பிறந்த பிறகும் குறையாத காதல்... கலக்கல் லுக்கில் கணவருடன் காஜல் அகர்வால் நடத்திய வேறலெவல் போட்டோஷூட்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால், தனது கணவருடன் நடத்திய ரொமாண்டிக் போட்டோஷூட் வைரலாகிறது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக வலம் வந்த இவர் கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சிலு என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
திருமணமான ஒரே ஆண்டில் கர்ப்பமான நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்தாண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் என பெயரிட்டுள்ளனர். குழந்தை பிறந்த பின்னர் சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த காஜல், தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகிவிட்டார். சமீபத்தில் கூட இவர் நடித்த கோஸ்டி திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடுபோன நகைகளில் மேலும் 43 சவரன் மீட்பு... குழப்பத்தில் போலீசார்
இதையடுத்து தமிழில் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான இந்தியன் 2-விலும் நடிகை காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் காஜல்.
இப்படி திருமணமாகி குழந்தை பெற்ற பின்னும் செம்ம பிசியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், தற்போது தனது கணவர் கவுதம் கிச்சிலு உடன் ரொமாண்டிக் போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள், அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளைக் குவித்து வருகின்றனர். சிலரோ குழந்தையை விட்டுட்டு இப்படி ரொமான்ஸ் பண்றீங்களே என ஜாலியாக கமெண்ட்டில் கலாய்த்து வருகின்றனர்.
காஜல் அகர்வால், கவுதம் கிச்சிலு ஜோடியின் இந்த ரொமாண்டிக் போட்டோஷூட் புகைப்படம் தற்போது டிரெண்டாகி வருகிறது. இந்த போட்டோஷூட்டில் நடிகை காஜல் அகர்வால் ஒல்லியான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.
இதையும் படியுங்கள்... விவசாயம் பண்ணுங்க டா... வித்துறாதீங்க! உதவி இயக்குனர்களுக்கு சொந்தமாக நிலம் வாங்கி கொடுத்த வெற்றிமாறன்