Joy Crizildaa : என் குழந்தைக்கு அவர் தான் அப்பா – ஜாய் கிரிசில்டா!
Joy Crizildaa Said that Madhampatty Rangaraj is Father of My Child : என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்று ஆடை வடிமைப்பாளரான ஜாய் கிரிசில்டா கூறியுள்ளார்.

என் குழந்தைக்கு அவர் தான் அப்பா – ஜாய் கிரிசில்டா!
Joy Crizildaa Said that Madhampatty Rangaraj is Father of My Child : ஆடை வடிமைப்பாளரான ஜாய் கிரிசில்டா கடந்த சில மாதங்களாக தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டதற்கும் இப்போது மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி புகார் கொடுத்ததற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் இருப்பது போன்று பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய அறிமுகம் தேவையில்லை. எங்கு பார்த்தாலும் அவரைப் பற்றிய பேச்சு தான் அடிபட்டு வருகிறது.
ஜாய் கிரிசில்டா புகார்
முதல் திருமணம் நடந்து 2 மகன்கள் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2ஆவதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கூட மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் பற்றி எதுவும் பேசவில்லை. அதுமட்டுமின்றி புகைப்படம், வீடியோ என்று எதுவும் பதிவிடவில்லை. ஆனால், கிரிசில்டா தொடர்ந்து திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்கு பிறகும் சரி திருமணம் தொடர்பான புகைப்படங்கள், மாதம்பட்டி ரங்கராஜ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து வந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் அண்ட் ஜாய் கிரிசில்டா
ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில், தனக்கு பிறக்க போகும் குழந்தைக்கு என்ன பெயர் தேர்வு செய்திருந்தார் என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தான் தற்போது சென்னை மாநரக காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி புகார் அளித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் 2ஆவது திருமணம், ஜாய் கிரிசில்டா 2ஆவது திருமணம்
அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார். சென்னையில் கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ், 7 மாத கர்ப்பமாக இருக்கும் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தங்கராஜ் தான் தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். இப்போது கடந்த 2 மாதங்களாக அவர் என்னை விட்டு விலகிவிட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளதாக கூறினார்.
என் குழந்தைக்கு அவர் தான் அப்பா – ஜாய் கிரிசில்டா!
இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை, தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும். மாதம்பட்டி ரங்கராஜை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியதாக தெரிவித்தார். மேலும் கருவை கலைக்கும் படி வற்பறுத்தி அடித்ததாகவும் தெரிவித்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா
இதனையடுத்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும் போது தனது மனைவியை விட்டு பிரிந்து இருப்பதாக தெரிவித்ததால் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.