சிக்கலில் ஜெயம் ரவியின் தோழி கெனிஷா: வெடிக்க இருக்கும் புதிய பிரச்சனை!!
நடிகர் ஜெயம் ரவி, கெனிஷா பற்றி பேசியபோது அவர் முறையாக பயிற்சி பெற்ற ஹீலர் என பெருமையாக பேசிய நிலையில், இந்த ஹீலிங் முறை தடை செய்யப்பட்ட முறை என்பது உங்களுக்கு தெரியுமா?
Jayam Ravis and Aarti Divorce
15 வருடங்களாக, அந்யோனியமான தம்பதியாக வலம் வந்த ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடியை திடீர் என, விவாகரத்து வரை சென்றுள்ளது, திரையுலகினர் மத்தியில்... தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆர்த்தி தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில்... இந்த விவாகரத்து ஜெயம் ரவி சுயமாக எடுத்த முடிவு என்றும், குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்டது அல்ல என்பதை கூறி இருந்தார். அதே போல்... ஜெயம் ரவியை பல முறை பார்த்து பேச முயன்றபோது தான் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், இந்த விவாகரத்து முடிவால் நானும் என் குழந்தைகளும் என்ன செய்வது என, புரியாமல் இருக்கிறோம் என உணர்வு பூர்வமாக கூறி இருந்தார்.
அதே போல் இந்த அறிக்கை வெளியிட்டதன் நோக்கம், தன்னுடைய நடத்தை குறித்து தவறாக பரப்பப்படும் விமர்சனங்கள் தான் என்பதை தெளிவாக கூறி இருந்த ஆர்த்தி,இதுபோன்ற விமர்சனங்களால் தன்னுடைய பிள்ளைகள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், இந்த நேரத்தில் தன்னுடைய பிள்ளைகளுக்கு நான் உறுதுணையாக இருக்க வேண்டும் என தாய் பாசத்தை வெளிப்படுத்தி இருந்தார். அறிக்கை வெளியிட்ட பின்னர், ஆர்த்தி ரவி தரப்பில் இருந்து தான்.. ஜெயம் ரவி மற்றும் கெனிஷா காரில் சென்று கோவா போலீசில் சிக்கிய விஷயங்கள் வெளியானதாக கூறப்பட்டாலும் இதுகுறித்து ஆர்த்தியோ அல்லது அவரின் பெற்றோரோ இதுவரை வாய் திறக்கவில்லை.
Jayam Ravi About Kenishaa
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரதர் படத்தின் ஆடியோ லான்ச்சில் கலந்து கொண்ட ஜெயம் ரவி... விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, "என்னுடைய வக்கீல் மூலம், முறையாக ஆர்த்தியின் தந்தையிடம் பேசிய பிறகே விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப பட்டது என்றும், அதற்க்கு முன்பு தன்னுடைய பெற்றோர் மற்றும் ஆர்த்தியின் பெற்றோர் கூடி பேசியதையும் தெரிவித்தார். அதே போல் தன்னுடைய மூத்த மகனிடம், விவாகரத்து குறித்து அவனுக்கு புரிவது போல் பேசினேன். ஆனால் அவர் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார், அதற்கான சாத்தியம் இல்லை என்பதையும் புரிய வைத்ததாக ஜெயம் ரவி பேசி இருந்தார்.
இந்த விழாவில், கெனிஷா உடனான காதல் கிசுகிசு குறித்து கேள்வி எழுப்பிய போது... 'வாழு வாழ விடு என... கூறியபடி, கெனிஷா தன்னுடைய தோழி மட்டுமே, அவரை தேவை இல்லாமல் இந்த விஷயத்தில் இழுக்க வேண்டாம். அவர் மிகவும் கஷ்டப்பட்டு உயர்ந்தவர். முறையாக ஹீலிங் பயிற்சி பெற்றவர். பல உயிர்களை காப்பாற்றி வருகிறார். வருங்காலத்தில் அவருடன் சேர்ந்து ஒரு ஹீலிங் சென்டர் துவங்கி பலருக்கு உதவ வேண்டும் என்பது தான் என் எண்ணம். அதை கண்டிப்பாக செய்வேன்... யாராலும் அதை தடுக்க முடியாது என கூறி இருந்தார்.
காலில் எலும்பு முறிவு.. ரஜினியுடன் சிட்டிங்கிலேயே ரொமான்டிக் பாடலில் நடித்த ஸ்ரீதேவி!
Healing Treatment
ஜெயம் ரவி, கூறிய அந்த ஹீலிங் சிகிச்சை முறை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் நல்ல விஷயங்கள் பல இருந்தாலும், அதே நேரம் சில ஆபத்துகளும் உள்ளது. எனவே தான் இந்தியாவில் இந்த முறை தடை செய்யப்பட்டுள்ளது. தன்னை ஒரு சைக்காலஜிஸ்ட் போல் காட்டிக் கொண்டு, கெனிஷா செய்யும் இந்த மனநிலை சிகிச்சை இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. இதை தென்னாப்பிரிக்கா நாட்டில் தான் பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஹீலிங் சிகிச்சை முறை குறித்து விரிவாக பார்ப்போம்:
ஹீலிங்” என்பது மருந்து இன்றி மாத்திரை இன்றி ஒரு மனிதனின் பிராண ஆற்றலை கொண்டு செய்யப்படும் ஒருவிதமான நேச்சுரோபதி அல்லது ஆன்மீக சிகிச்சை முறை என்று கூறலாம்.
ஒருவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால், அவர்களுக்கு அலோபதி மற்றும் ஹோமியோபதி மூலம் சில மருந்துகள் கொடுக்க படுகிறது. இது நோயாளிகளுக்கு மறு-உந்து சக்தியை கொடுத்து அவர்கள் உடல்நல பிரச்சனையில் இருந்து வெளியே வர உதவுகிறது. ஆனால் சின்ன தலைவலி என்றால் கூட இதுபோல் அடிக்கடி மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவது தவறு. மனித உடலில் இயல்பாகவே உந்து சக்தி உள்ளது. நாம் தொடர்ந்து சின்ன சின்ன பிரச்னைகளுக்கு கூட, மருந்துகளை தேடி செல்லும்போது, நம்முடைய உடல் அந்த குறிப்பிட்ட மருந்திற்காக செயல்பட ஆரம்பித்துவிடும் குறிப்பாக 'அல்லோபதி' மருந்துகளை கூறலாம்.
Healing Treatment Benefit
இப்படி நாம் அதிக அளவில் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது... உடல் உந்து சக்தியை இழந்து விட நேர்கிறது. அதாவது நம் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். அதே நேரம் நம் உடலில் ஏதேனும் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டால், அதற்க்கு உகந்த மருந்துகள்... மருத்துவ ஆலோசனையோடு எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
ஆனால் இதுபோன்ற மருந்துகளே இல்லாமல்... மனிதனில் உடலில் உள்ள உந்து சக்தியை அதிகரித்து சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தான், ஹீலிங் சிகிச்சை முறை.
இந்த ஹீலிங் சிகிச்சை முறை, சவாலான சூழ்நிலைகளில் நிதானமாக யோசிக்க, அதை கடந்து செல்ல உதவும்.
பயம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது.
குழப்பமான மனநிலையை நீக்குகிறது.
வரம்புகள் மற்றும் தடைகளை கடக்க உதவுகிறது.
உங்களை பற்றிய சுய விழிப்புணர்வை மேம்படுத்துகிறது.
பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது.
உங்கள் ஆன்மாவையும் ஆவியையும் இணைக்க உதவுகிறது.
உங்கள் திறனைக் கண்டறிந்து வாழ உதவுகிறது.
நிகழ்காலத்தில் கவனம் செலுத்த உதவுவதன் மூலம் விரும்பத்தகாத உணர்ச்சிகளைக் குறைக்கிறது.
உடல் கோளாறுகளின் காரணத்தைப் மன உளைச்சல் இன்றி புரிந்துகொள்ள உதவுகிறது.
இது போன்ற சிகிச்சை, மன ரீதியாக மட்டுமே நல்ல பலன் அளிக்க கூடியதாக உள்ளது. அதே சமயம் பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக மருத்துவர்களை அணுக வேண்டியது கட்டாயமானது.
ஒரே படத்தில் ஐம்பூதங்களை தீமாக வைத்து.. 5 பாடல்களை உருவாக்கிய ஏ.ஆர்.ரகுமான்!
Healing Treatment Banned in India:
கடந்த 2018-ஆம் ஆண்டு, ஹீலிங் சிகிச்சை பரவலாக பேசப்பட்டு வந்த போது... முன்னோர்களை போல், இயற்க்கை முறையில் பிரசவம் பார்ப்பதாக கூறி, ஒரு பெண்ணின் கணவர் வீட்டிலேயே தன்னுடைய மனைவிக்கு பிரசவம் பார்த்து, அந்த பெண்ணின் இறப்புக்கு காரணமாக மாறினார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது ஹீலிங் சிகிச்சை அதாவது இயற்க்கை முறையில் பிரசவம், என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல் மற்றொருவர் தானாகவே மனைவிக்கு பிரசவம் பார்த்ததற்கு கைது செய்யப்பட்டார்... இவரும் மருத்துவமனை செல்ல விரும்பவில்லை என கூறி இருந்தனர்.
நம் தாத்தா பாட்டி காலத்தில், இதுபோன்ற இயற்க்கை சிகிச்சை முறை அவர்களுக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. இந்த நவீன நாகரீக காலத்தில், நாம் நம் முன்னோர்களை பின்பற்ற முயற்சிக்கலாமே தவிர, அவர்களின் வாழ்க்கை மற்றும் சிகிச்சை முறையை மேற்கொள்வது ஆபத்தை தான் விளைவிக்கும். இதன் காரணமாக, இந்த ஆன்மீக சிகிச்சை எனப்படும் இயற்க்கை சிகிச்சை முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்கிற பழமொழிக்கு ஏற்ற... ஊரோடு ஒத்து போய் எந்த ஒரு பிரச்சனைக்கும் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது மிக முக்கியம்.