அம்மாவின் நினைவு தினம்..! அச்சு அசல் ஜெயலலிதா போல் மாறிய புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா..!
First Published Dec 5, 2020, 5:16 PM IST
'தலைவி' படக்குழு சார்பாக ஜெயலலிதாவின் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக, அரசியலில் ஈடுபட்ட காலங்களில் ஜெயலலிதா எப்படி இருந்தாரோ அதே போல் சேலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிடுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கங்கனா ரணாவத். தமிழ் திரையுலகில் நடிகை நயன்தாரா எப்படி தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வரும் படங்களில் நடித்து, தன்னுடைய நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருகிறாரோ, அதே போல் கங்கனா மிகவும் அர்ப்பணிப்போடு ஒவ்வொரு படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து வெளியான மணிகர்ணிகா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?