MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜன நாயகன் பட OTT உரிமையை போட்டிபோட்டு வாங்கிய பிரபல நிறுவனம்; அதுவும் இத்தனை கோடிக்கா?

ஜன நாயகன் பட OTT உரிமையை போட்டிபோட்டு வாங்கிய பிரபல நிறுவனம்; அதுவும் இத்தனை கோடிக்கா?

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை முன்னணி டிஜிட்டல் தளம் பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 01 2025, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

The OTT license of the film 'Jana Nayagan' was sold for Rs. 121 crore! நடிகர் விஜய்யின் 69-வது படம் ஜன நாயகன். இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கடைசியாக பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்த பூஜா, தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

24

விஜய்யின் கடைசி படம்

ஜன நாயகன் திரைப்படத்தில் விஜய்யுடன் மமிதா பைஜு, கெளதம் மேனன், பாபி தியோல், டீஜே அருணாச்சலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படம். இப்படத்திற்கு பின் அவர் அரசியலில் குதிக்க உள்ளதால் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும் முடிவேடுத்துள்ளார். விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... 'ஜனநாயகன்' படத்தின் கதைக்களம் இதுவா? அரசியலுக்கு திரைப்படம் மூலம் பக்கா ஸ்கெச் போட்ட தளபதி!

34

ஜன நாயகன் பொங்கல் ரிலீஸ்

ஜன நாயகன் திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏனெனில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர்ச்சியாக 10 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் அப்போது வெளியிட்டால் பாக்ஸ் ஆபிஸிலும் கலெக்‌ஷன் அள்ளிவிடலாம் என்கிற முனைப்போடு ஜன நாயகன் படக்குழு உள்ளது. ஆனால் இப்படத்தின் வசூல் வேட்டைக்கு ஆப்பு வைக்க சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படமும் இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளதாம்.

44

ஜன நாயகன் ஓடிடி ரைட்ஸ்

இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமம் பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம். அதுவும் சுமார் 121 கோடி ரூபாய்க்கு ஜன நாயகன் படத்தின் ஓடிடி ரைட்ஸை அந்நிறுவனம் வாங்கி இருக்கிறதாம். இப்படம் இந்தியில் மல்டிபிளக்ஸில் வெளியாவதால் படம் ரிலீஸ் ஆகி 8 வாரங்களுக்கு பின்னர் தான் ஓடிடியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஜன நாயகனுக்கு முன் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன விஜய் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
தளபதி விஜய்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved