- Home
- Cinema
- ஜன நாயகன் படத்திற்குத் தடங்கல் – அதிகாலை காட்சி ரத்து: ஏன், எதற்கு தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
ஜன நாயகன் படத்திற்குத் தடங்கல் – அதிகாலை காட்சி ரத்து: ஏன், எதற்கு தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
Jana Nayagan Early Morning Show Cancelled : தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜன நாயகன் படத்தின் அதிகாலை காட்சிகள் கேரளாவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதே போன்று மற்ற மாநிலங்களில் எப்படி என்ற தகவல் வெளியாகவில்லை.

Thalapathy 69 Jana Nayagan Release Updates
விஜய்யின் கடைசி படமாக உருவாகியிருக்கும் படம் தான் ஜன நாயகன். இயக்குநர் ஹெச் வினோத் இயக்கியுள்ள இந்தப் படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக கருதப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஜன நாயகன் படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, நாசர், பிரகாஷ் ராஜ், பிரியாமணி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
Jana Nayagan Morning Show Cancelled Tamil Nadu
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள தளபதி கச்சேரி, ஒரு பேரே வரலாறு, செல்ல மகள் ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதில் செல்ல மகள் பாடலை விஜய் பாடியுள்ளார். முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்திய இந்த படம் 2026ஆம் ஆண்டில் சிறந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Vijay Jana Nayagan Special Show Issues
அதே போன்று ரூ.1000 கோடி வசூல் குவித்த படம் என்ற சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் ஜன நாயகன் படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் அளவுக்கு அதிகமான ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ள விஜய்யின் ஜன நாயகன் படத்தை அதிகாலை 4 மணிக்கு ஒளிபரப்பு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இப்போது அதிகாலை 4 மணி ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Jana Nayagan Movie FDFS Cancelled Reason
மேலும், காலை 6 மணிக்கு முதல் ஷோ வெளியாகும் என்று தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம், கூட்ட நெரிசல் ஏற்படக் கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்திலும் இதே நிலை தான் என்று தெரிகிறது. என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.