MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Vinayagar Chaturthi Wishes in Tamil
Gowri Ganesha Festival Wishes in Tamil
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Cinema
  • ஜன நாயகன் படத்துக்கு வந்த சோதனை; இணையத்தில் கசிந்த முழு படம்- கண்ணீர் மல்க சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!

ஜன நாயகன் படத்துக்கு வந்த சோதனை; இணையத்தில் கசிந்த முழு படம்- கண்ணீர் மல்க சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!

Jana Nayagan Leak Sivakarthikeyan Condemns : தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' படம் லீக் ஆனதற்கு சிவகார்த்திகேயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பைரசியை ஆதரிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

1 Min read
Author : Rsiva kumar
Published : Apr 10 2026, 07:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜன நாயகன்: கண்ணீர் மல்க சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
Image Credit : Sathiyam News, KVN Productions

ஜன நாயகன்: கண்ணீர் மல்க சிவகார்த்திகேயன் வேண்டுகோள்

தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' படக் காட்சிகள் இணையத்தில் கசிந்ததற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து தனது X (ட்விட்டர்) பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மனிதர்களின் ஆர்வம், ரத்தம் மற்றும் வியர்வையால் உருவாகிறது. தயவுசெய்து பைரசியைத் தவிருங்கள். தியேட்டரில் படம் வெளியாகும் வரை காத்திருந்து பாருங்கள். இந்தச் செயலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திறமையையும், கடின உழைப்பையும், சினிமாவையும் மதியுங்கள்!"

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தயாரிப்பு நிறுவனத்தின் 'வார்னிங்' அறிக்கை:
Image Credit : X

தயாரிப்பு நிறுவனத்தின் 'வார்னிங்' அறிக்கை:

படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்‌ஷன்ஸ், லீக் ஆன காட்சிகளைப் பகிர்பவர்களுக்கு எதிராக மிக வலுவான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அவர்களின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

கிரிமினல் குற்றம்: படத்தையோ அல்லது காட்சிகளையோ WhatsApp, Telegram, Instagram, YouTube போன்ற எந்தத் தளத்திலும் பதிவிறக்கம் செய்வது, பார்ப்பது அல்லது பகிர்வது மிகப்பெரிய கிரிமினல் குற்றமாகும்.

35
டிஜிட்டல் ட்ராக் (Digital Track):
Image Credit : Facebook

டிஜிட்டல் ட்ராக் (Digital Track):

ஆன்லைனில் செய்யக் கூடிய ஒவ்வொரு நடவடிக்கையையும் பின்தொடர முடியும். ஏற்கனவே தடயவியல் விசாரணைகள் (Forensic Investigation) தொடங்கப்பட்டுவிட்டன.

தண்டனை உறுதி: இந்தச் சங்கிலித் தொடரில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்கள் மீது பாரபட்சமின்றி சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் பதியப்படும்.

45
ஜன நாயகன்
Image Credit : X

ஜன நாயகன்

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்', அவர் முழு நேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக வெளியாகும் கடைசிப் படம் என்பதால் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்சார் நடைமுறைகளால் பொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளிப்போன இப்படம், தற்போது பைரசி சிக்கலைச் சந்தித்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

55
ஜன நாயகன் படத்துக்கு வந்த சோதனை
Image Credit : instagram

ஜன நாயகன் படத்துக்கு வந்த சோதனை

தளபதி விஜய் தவெக கட்சியை ஆரம்பித்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி முழு நேர அரசியல்வாதியாக நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் ஜன நாயகன் பட ரிலீஸில் முழு கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் இப்போது ஜன நாயகன் முழு படமும் ஹெச் டி வீடியோவாக லீக் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
டிவி.கே. விஜய்
ஜன நாயகன்
ஜனநாயகன்
ஜன நாயகன் வெளியீட்டு தேதி
சிவகார்த்திகேயன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Recommended image2
Mandaadi vs Sardar 2 : சரசரவென சரிந்த சர்தார் 2 வசூல்... மளமளவென உயர்ந்த மண்டாடி கலெக்‌ஷன் - 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Recommended image3
OTT Releases : மொத ராத்திரி முதல் ராம் அண்ட் லீலா வரை... இந்த வாரம் ஓடிடியில் டஜன் கணக்கான படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved