திடீரென ரிஷிகேஷ் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. தயானந்த சரஸ்வதி சமாதி - மாலை அணிவித்து மரியாதை! Viral Pics
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வரும் நிலையில் அவர் இமயமலைக்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நல்ல பல திரைப்படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி நல்ல வசூலை பெற்று வரும் திரைப்படம் தான் ஜெயிலர்.
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு விண்டேஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்த திரைப்படத்தில் பார்க்க முடிந்ததாக அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் தன் திறமையை நிரூபித்துள்ளார் நெல்சன் என்றும் பலரும் வெகுவாக அவரை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது தனது இமயமலை பயணத்தை தொடங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக ரிஷிகேஷில் உள்ள தயானந்த சுவாமி அவர்களின் சமாதியில் மாலை அணிவித்து தரிசனம் செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தனது இமயமலை பயணத்தை முடித்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிஜி ஞானவேல் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.