MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜெயிலருக்கே ஷாக்கானா எப்படி; இனிதான் ஷிவராஜ்குமாரின் ரியல் சம்பவமே இருக்கு! ஷிவாண்ணாவின் Next தமிழ் படம் ரெடி

ஜெயிலருக்கே ஷாக்கானா எப்படி; இனிதான் ஷிவராஜ்குமாரின் ரியல் சம்பவமே இருக்கு! ஷிவாண்ணாவின் Next தமிழ் படம் ரெடி

ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்து அசத்திய பிரபல கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், அடுத்ததாக மற்றொரு பிரம்மாண்ட தமிழ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 16 2023, 03:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விக்ரம் படத்தில் இடம்பெறும் ரோலெக்ஸ் கேமியோவுக்கு இணையாக ஷிவ ராஜ்குமாரின் ஜெயிலர் பட கேமியோ ரோல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெயிலரில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தாலும், அவரை மிஞ்சும் அளவுக்கு தன்னுடைய கேமியோ ரோலில் ஸ்கோர் செய்திருந்தார் ஷிவ ராஜ்குமார். வெறும் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே வந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேரக்டராக ஷிவ ராஜ்குமாரின் நரசிம்மா கேரக்டர் அமைந்துள்ளது.

24

ஜெயிலர் திரைப்படம் கர்நாடகாவில் சக்கைப்போடு போடுவதற்கு காரணமும் ஷிவ ராஜ்குமாரின் கேமியோ தான். இவர் இதுவரை தமிழ் படங்களில் தலைகாட்டாமல் இருந்தாலும், ஒரே படத்தில் மாஸ் ஹீரோவாக உயர்ந்துவிட்டார். ஜெயிலர் படத்துக்கு பின்னர் அவர் நடித்த கன்னட படங்களை தமிழ்நாட்டு ரசிகர்கள் தேடி தேடி பார்க்கும் அளவுக்கு ஷிவாண்ணாவுக்கு தமிழ்நாட்டில் மவுசு கூடி உள்ளது. ஜெயிலர் வெற்றியால் ஷிவ ராஜ்குமாரின் அடுத்த தமிழ் படத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

இதையும் படியுங்கள்... கமலின் விக்ரம் படத்துக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்துக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா! ஓர் அலசல்

34

அதன்படி அவர் அடுத்ததாக தமிழில் நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மாஸ் வில்லனாக மிரட்டி இருக்கிறாராம் ஷிவ ராஜ்குமார். ஜெயிலர் படத்தால் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் வருகிற டிசம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

44

ரகுவரனின் மறைவுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா போன்ற ஹீரோக்களை வில்லனாக நடிக்க வைக்கும் சூழல் உருவானது. தற்போது அவர்களும் பிசியானதால் பிற மொழிகளில் இருந்து வில்லன்களை களமிறக்கி வருகின்றனர். ஏற்கனவே மலையாளத்தில் இருந்து வந்த பகத் பாசில், விநாயகன் ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், கேப்டன் மில்லர் ரிலீசுக்கு பின் ஷிவாண்ணாவும் கோலிவுட்டில் மாஸ் வில்லனாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கயல் சீரியலில் நடந்த செம்ம ட்விஸ்ட்! பிரச்சனைக்கு நடுவே ஆர்த்தி கழுத்தில் தாலி கட்டியது யார் தெரியுமா.?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved