MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கமலின் விக்ரம் படத்துக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்துக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா! ஓர் அலசல்

கமலின் விக்ரம் படத்துக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்துக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா! ஓர் அலசல்

கமல்ஹாசனின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான விக்ரமுக்கும், ரஜினியின் சமீபத்திய ஹிட் படமான ஜெயிலருக்கும் உள்ள சில ஒற்றுமைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 16 2023, 02:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் தான் விக்ரம். கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்தது. கடந்த வாரம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் இந்த சாதனையை இன்னும் சில தினங்களில் முறியடிக்க உள்ளது. இதெல்லாம் இருக்கட்டும், இந்த இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

27

அனிருத்

விக்ரம் மற்றும் ஜெயிலர் இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணம் அனிருத்தின் இசை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. இரண்டு படங்களிலுமே டல் அடிக்கும் காட்சிகளில் கூட தன்னுடைய பிஜிஎம்மால் ஸ்கோர் செய்து அசத்தி இருப்பார் அனி. அதுமட்டுமின்றி விக்ரமில் ரோலெக்ஸ் ஆக இருந்தாலும் சரி, ஜெயிலரில் நரசிம்மாவாக இருந்தாலும் சரி அவர்களுக்கு அனிருத் போட்ட பிஜிஎம் தனி ரகம் என்றே சொல்லலாம்.

37

வில்லன்

விக்ரம் படத்தில் பகத் பாசில் ஒரு வில்லனாக நடித்திருப்பார். இவர் ஒரு மலையாள நடிகர். அதேபோல் ஜெயிலரிலும் மலையாள நடிகரான விநாயகனை வில்லனாக நடிக்க வைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர். பகத் பாசில், விநாயகன் இருவருமே தரமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தனர்.

47

கேமியோ

விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாலும், நடிகர் சூர்யா கிளைமாக்ஸில் 5 நிமிட கேமியோ ரோலில் வந்து அப்ளாஸ் வாங்கினார். அதேபோல தான் ஜெயிலரில் நடிகர் ஷிவ ராஜ்குமார் கிளைமாக்ஸில் வந்து தன் மாஸான கேமியோவால் ஸ்கோர் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்... அது நடந்து 5 வருஷம் ஆகிடுச்சாம்... காதலுக்கு கிடைத்த வெற்றி - ராஷ்மிகாவுடன் ஜோடியாக கொண்டாடிய விஜய் தேவரகொண்டா

57

மகன் செண்டிமெண்ட்

விக்ரம், ஜெயிலர் இரண்டு படங்களிலுமே மகன் செண்டிமெண்ட் முக்கிய பங்காற்றி இருக்கும். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இரண்டு படங்களிலுமே மகன் கேரக்டரில் நடித்துள்ளவர்களுக்கு போலீஸ் கதாபாத்திரம் தான். விக்ரமில் கமலின் மகனை நல்லவனாக காட்டி இருப்பார்கள். ஆனால் ஜெயிலரில் ரஜினியின் மகனை கெட்டவனாக காட்டி இருப்பார்கள்.

67

இண்டர்வெல்

விக்ரம், ஜெயிலர் இரண்டு படங்களுக்குமே உயிர் கொடுத்தது இண்டர்வெல் காட்சிகள் என சொல்லலாம். விக்ரம் படத்தில் கமல் கோஸ்ட் ஆக மாறும் சீன் வேறலெவலில் இருக்கும். அதேபோன்ற ஒரு மாஸ் டிரான்ஸ்பர்மேஷன் சீனை தான் ஜெயிலர் படத்திலும் ரஜினிக்கு வைத்திருப்பார்கள்.

77

பழைய பாடல்கள்

விக்ரம் படத்தில் சக்கு சக்கு வத்திக்குச்சு பாடலை பயன்படுத்தி அப்பாடலை வேறலெவலில் டிரெண்டாக்கி இருந்தார் லோகேஷ். அதே பார்முலாவில் ஜெயிலரில் வில்லன் வர்மன் கேங் இரு பாடல்களுக்கு நடனமாடி வைப் செய்திருப்பார்கள். அதில் ஒன்று 1999-ம் ஆண்டு வெளிவந்த தால் என்கிற இந்தி படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தால் சே தால் என்கிற பாடல் மற்றொன்று ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற கண்ணோடு காண்பதெல்லாம் பாடல்.

இப்படி விக்ரம் படத்தின் வெற்றிக்கு வித்திட்ட பல விஷயங்களை ஜெயிலரிலும் பயன்படுத்தி விக்ரமையே மிஞ்சும் அளவுக்கு பிரம்மாண்ட வெற்றியை ருசித்திருக்கிறார் நெல்சன்.

இதையும் படியுங்கள்... டெரர் வில்லனாக மிரட்டிய விநாயகனுக்கு கம்மி சம்பளம் வழங்கிய ஜெயிலர் படக்குழு - அதுவும் இவ்வளவுதானா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
லோகேஷ் கனகராஜ்
ரஜினிகாந்த்
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நிலாவை டார்ச்சர் பண்ணும் ராகவ்... வீட்டுக்கு சீல் வைக்க வந்த போலீஸ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
ரோகிணிக்கு பயந்து மனோஜை பெரும்சிக்கலில் மாட்டிவிடும் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் சரவெடி ட்விஸ்ட்
Recommended image3
ரேவதிக்கு ஐஸ் வைக்க செங்கல் உடைக்கும் மாப்பிள்ளை – கார்த்திகை தீபம் சீரியலின் காமெடி பீஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved