டெரர் வில்லனாக மிரட்டிய விநாயகனுக்கு கம்மி சம்பளம் வழங்கிய ஜெயிலர் படக்குழு - அதுவும் இவ்வளவுதானா?
ஜெயிலர் படத்தில் வர்மன் என்கிற டெரர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய நடிகர் விநாயகனுக்கு மிகவும் கம்மி தொகையே சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம்.
ரஜினிகாந்தின் மாஸ் ஆன கம்பேக் திரைப்படமாக ஜெயிலர் அமைந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றியால் அப்படத்தில் நடித்த நடிகர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஜெயிலர் படத்தின் மூலம் அதிகம் கவனம் பெற்றவர் என்றால் அது மலையாள நடிகர் விநாயகன் தான்.
ஜெயிலர் படத்தில் வர்மன் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் விநாயகன். பாடி லாங்குவேஜ், மலையாளம் கலந்து தமிழ் பேசுவது என படத்தில் ரியல் வில்லனாகவே வாழ்ந்திருந்தார் விநாயகன். நடிகர் ரஜினிகாந்தே விநாயகனின் நடிப்பை பார்த்து வியந்துபோய், ஆடியோ லாஞ்சில் பாராட்டி இருந்தார். அந்த அளவுக்கு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் விநாயகன். இவர் இதற்கு முன் தமிழில் திமிரு, மரியான் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், ஜெயிலர் தான் அவரின் நடிப்புக்கு தீனிபோட்ட படமாக அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... படாதபாடு படுத்தும் மயோசிடிஸ் நோய்... சமந்தா இன்னும் குணமாகல - விஜய் தேவரகொண்டா சொன்ன அதிர்ச்சி தகவல்
இப்படி ஜெயிலர் படத்தில் டெரரான வில்லனாக மிரட்டிய விநாயகன், அப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவருக்கு வெறும் ரூ.35 லட்சம் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பெரியளவில் மார்க்கெட் இல்லாததன் காரணமாகவே இவ்வளவு கம்மியான தொகையை சம்பளமாக கொடுத்துள்ளார்களாம்.
ஜெயிலர் படத்தில் வெறும் 5 நிமிட கேமியோ ரோலில் நடித்த மோகன்லால் ரூ.8 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், அப்படம் முழுக்க வரும் விநாயகனுக்கு வெறும் ரூ.35 லட்சம் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கும் தகவல் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இருப்பினும் ஜெயிலர் வெற்றிக்கு பின்னர் விநாயகனின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. இனி அவர் கமிட் ஆகும் படங்களுக்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபீஸ் கிங்.. நெகட்டிவ் விமர்சனம் கிடைத்தாலும் அசால்டா 100 கோடி வசூல் செய்த ரஜினி படங்கள்!